Categories
உலக செய்திகள்

என்ன “எஜமான்னு” தான் கூப்பிடனும்… இலங்கைப் பெண்ணை கொடுமைப்படுத்திய அமெரிக்க காதலர்… கொடூரத்தை புத்தகமாக வெளியிட்ட சுவாரஸ்யம்…!

வெளிநாட்டில் ஒரு வருடமாக அடிமையாக நடத்தப்பட்ட இலங்கை பெண் தற்போது அதிலிருந்து வெளியே வந்த சம்பவம் நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கையில் பிறந்து அமெரிக்காவில் வளர்ந்த தான்யா செல்வரத்தினம் என்பவருக்கு நியூயார்க்கின் அட்டர்னி ஜெனரல் பதவியில் இருக்கும் ஒருவரின் அறிமுகம் கிடைத்தது. அதன் பிறகு தன் வாழ்க்கை இப்படி மோசமாக இருக்கும் என தான்யா கனவில் கூட நினைத்திருக்க மாட்டார். எரிக் ஷ்னீடர்மேன் என்ற நபர் தான்யாவை ஒரு அடிமைப் போல் நடத்தியிருக்கிறார்.

எரிக் தாம்பத்திய உறவின் போது தான்யாவை அறைந்து, கழுத்தை பிடித்து நெரித்து, முகத்தில் எச்சில் துப்பி மோசமாக நடந்து கொண்டுள்ளார். மேலும் நீ என் பழுப்பு நிற அடிமை. என்னை எஜமானே என்றுதான் அழைக்க வேண்டும் என்று வற்புறுத்திக் கூறியுள்ளார். தான்யாவிற்கு எரிக் உடனான வாழ்க்கை மிகவும் கொடுமையாக இருந்தது.

ஆனால் அவரை விட்டு பிரிந்தார் கொலை செய்து விடுவேன் என்று வேறொரு நியூயார்க் அட்டர்னி ஜெனரல் மிரட்டியுள்ளார். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் தான்ய தன் கொடுமையான வாழ்க்கையைத் தொடர்ந்து இருக்கிறார். ஆனால் வேறு சில பெண்கள் மூலம் தான்யாவிற்கு விடிவுகாலம் பிறந்தது.

எப்படி என்றால், எரிக் கால் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட மூன்று பெண்கள் அவர்மீது புகார் அளித்தனர். அதனால் தான்யாவிற்கும் தைரியம் வந்து நான்கு பெண்களும் சேர்ந்து எரிக் மீது புகார்களை வைத்தனர். ஆனால் இதற்கு பதிலளித்த எரிக். நான் யாரையும் வற்புறுத்தவில்லை. அவர்களாகவே விரும்பித்தான் என்னுடன் உறவு வைத்துக் கொண்டார்கள் என்று கூறினார்.அதன் பின் ஒரு வழியாக சமூக சேவகரின் உதவியுடன் தான்யா ஏரிக் உடனான தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டார்.

ஆனால் அவருடன் ஓராண்டு காலமாக தான் அனுபவித்த கொடுமைகளை ஒரு புத்தகமாக வெளியிட்டுள்ளார். “அஸ்ஸும் நத்திங்க்” என்ற அந்த புத்தகத்தில் தான்யா ஓராண்டு காலமாக பயந்து தான் அடக்கிவைத்த உணர்வுகளை கொட்டி தீர்த்துள்ளார். அதன்பின் அவசர அவசரமாக தன் அட்டர்னி ஜெனரல் பதவியை ராஜினாமா செய்த எரிக் எங்கோ உள்ள ஒரு பள்ளியில் தியானம் கற்றுக் கொடுப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

Categories

Tech |