Categories
தேசிய செய்திகள்

3 குழந்தைகளோடு தாய் செய்த காரியம்… வீட்டுக்கு வந்த கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி ..!!

மலப்புரம் அருகே குடும்பத் தகராறு காரணமாக 3 மகள்களுக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள வழிக்கடவு புதுக்கல் பகுதியை சேர்ந்த 42 வயதான ராமன் என்பவர் கோழிக்கோட்டில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி ரஹானா. இவர்களுக்கு ஆதித்யன், அர்ஜுனன், ஆனந்த் ஆகிய 3 மகன்கள் உள்ளனர். இராமனுக்கும் திருமணம் முடிந்து 15 ஆண்டுகள் ஆன நிலையில் இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலையும் கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் ராமன் மாலையில் வேலைக்காக கோழிக்கோடு சென்று விட்டார்.

குடும்ப பிரச்சினையில் மன வெறுப்படைந்த ரஹானா தற்கொலை செய்ய முடிவு செய்தார். ஆனால் தனது குழந்தைகளை விட்டு செல்ல அவருக்கு மனம் இல்லாத காரணத்தினால் தனத மகன்களுக்கும் விஷம் கொடுக்க முடிவு செய்தார். அதன் பின்னர் அங்குள்ள ஒரு கடைக்குச் சென்று விஷம் வாங்கி வந்தார். நேற்று முன்தினம் இரவு படுக்க செல்லும் போது தனது மனதை கல்லாக்கிக் கொண்டு மூன்று மகன்களுக்கும் விஷம் கொடுத்து அவர்கள் இறந்ததை உறுதிப் படுத்திய பின்னர் பக்கத்து அறைக்குச் சென்று கதவை சாத்தி அங்கிருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நேற்று பகல் 12 மணி ஆகியும் அவர் வீட்டின் கதவு திறக்காததால் அக்கம்பக்கத்தினர் இருந்தவர்கள் அவரது உறவினர்களுக்கு தகவல் அனுப்பினார். அங்கு வந்த உறவினர்கள் பலமுறை தட்டியும் கதவு திறக்கவில்லை. பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ஆதித்யன், அர்ஜுனன், ஆனந்த் ஆகியோர் பிணமாக கிடந்தனர். மற்றொரு அறையில் ரஹானா தூக்கில் தொங்கியபடி கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின்பேரில் அங்கு வந்த போலீசார் 3 சடலங்களையும் மற்றும் ரிஹானாவின் சடலத்தையும் மீட்டு பரிசோதனைக்காக மல்லபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கணவருக்கு தகவல் அனுப்பி கோழிக்கோட்டில் இருந்து திரும்பி வந்த ராமன் மனைவி மற்றும் குழந்தைகளை பார்த்து கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. மேலும் ரஹானா தூக்கில் தொங்கிய அறையில் ஒரு கடிதம் கைப்பற்றப்பட்டது. அதில் என்ன எழுதி இருந்தார் என்பது தெரியவில்லை.

Categories

Tech |