Categories
Uncategorized

என்னாது… கொரோனா வந்தா விரல் அழுகுதா…! இது என்னப்பா புதுசா இருக்கு… மூதாட்டிக்கு நேர்ந்த சோகம்…!

மூதாட்டி ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அவரின் மூன்று விரல்கள் அழுகிய  சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸால் நுரையீரல், சிறுநீரகம் உள்ளிட்டவை மட்டுமே பாதிக்கப்படும் என்று சொல்லி வந்த நிலையில், தற்போது உடல் உறுப்புகள் அழுகுவதற்கும் வாய்ப்புள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஏனென்றால், இத்தாலியின் 86 வயதான மூதாட்டி ஒருவருக்கு கடந்த மார்ச் மாதம் கொரோனா தொற்று ஏற்பட்டது. ஆனால் அவரது உடலில் எந்த அறிகுறியும் தென்படவில்லை.

அதன்பிறகு ஒருநாள் திடீரென அவரின் உடலின் பாகங்கள் கருமையாக மாறியது. அதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனை கண்ட மருத்துவர்கள், இது கொரோனா  வைரஸின் உச்சபட்ச நிலையில் ஒன்றானது என்று தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து மருத்துவர்கள் கூறியதாவது, பாதிக்கப்பட்டுள்ள மூதாட்டிக்கு நீக்ரோடிக் எனப்படும் ரத்த உறைதல் ஏற்பட்டு உள்ளது.

அதனால் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாடு குறைந்து இதயத்திற்கு செல்லும் ரத்தத்தின் அளவு குறைந்துள்ளது. அதன் பிறகு ரத்த நாளங்கள் பாதிக்கப்பட்டால் நிச்சயம் ரத்தம் உறைதல் ஏற்படும் என்ற அச்சத்தில் மருத்துவர்கள் அதனை சரி படுத்துவதற்கான மாத்திரைகளை அளித்தனர். ஆனால் அதில் எந்த பயனும் ஏற்படவில்லை.

ஏனென்றால் தொற்று ஏற்பட்டவரின் விரல்களில் ரத்தம் உறைய தொடங்கியது. அதன்பின் அவரது மூன்று விரல்களும் செயல் இழந்தது. செயல் இழந்த அவரின் விரல் செல்களை ஆய்வு செய்தபோது அதில் திரம்போஸில் அறிகுறிகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.மேலும் இத்தாலியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பலருக்கு இந்த அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளது என்று ஆய்வாளர்  கிரகான் கூரூக் கூறியுள்ளார். தொற்றினால் புது புது உறுப்புகள் செயல் இழப்பதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Categories

Tech |