Categories
மாநில செய்திகள்

அரவிந்த் கெஜ்ரிவால் சாதனையாளர்… ஆதரவு தரும் கமல்ஹாசன் !

டெல்லி சட்ட சபை தேர்தலில் தற்போதைய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார். 

தலைநகர் டெல்லியில் வருகின்ற பிப்ரவரி 8-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து பிப்ரவரி 11 ஆம் தேதி வாக்கு எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகிறது.தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ளதால் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைத் தக்க வைக்க அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி மும்முரமாக களப்பணியாற்றி வரும் அதேவேளையில், எப்படியாவது இந்தமுறை ஆட்சியைப்பிடித்து விடவேண்டும் பா.ஜ.க தீவிர முனைப்பு காட்டி வருகிறது.

இந்த நிலையில் தற்போதைய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவு தரும் வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், பிரபல நடிகருமான கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கெஜ்ரிவாலின் பேச்சு ஒன்றை பகிர்ந்து தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

கமல் கூறியதாவது, அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு சாதனையாளர். அவரின் உரை பிரமிக்கத்தக்கது. கெஜ்ரிவாலை ஒரு தலைவராக பின் தொடராதீர்கள். அவரை அப்படியே உள்வாங்கி கொள்ளுங்கள். இது அறிவுரையல்ல. நமக்கு விடப்பட்டிருக்கும் ஒரு சவால். நான் இந்த சவாலை ஏற்றுக்கொண்டுள்ளேன். என்னுடைய தோளோடு தோள் நிற்கும் என்  சகோதரரருக்கு நான் சல்யூட் செய்கிறேன். டெல்லி தொலைவில் இல்லை. இவ்வாறு  கமல் பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |