Categories
அரசியல் மாநில செய்திகள்

சுயநலவாதிகளை சேர்த்த எடப்பாடி…! செம அடிஅடித்த நீதி தேவதை…. கெத்தாக பேசிய ஓபிஎஸ் அணியினர்…!!

அதிமுக பொதுக்குழு தீர்ப்பால் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள கோவை செல்வராஜ், தொண்டர்களால் ஒருமனதாக ஒருங்கிணைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட அண்ணன் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் கட்சியை கட்டுப்பாட்டோடு நடத்த வேண்டும் என்று சொன்ன நேரத்தில், சில சுயநலவாதிகளை சேர்த்துக்கொண்டு எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஜூன் 23ஆம் தேதி இரண்டு பேரும் கையெழுத்திட்டு பொதுக்குழுவுக்கு அழைப்பு விடுத்தன.

அந்த நேரத்தில் தன்னிச்சையாக எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தன்னை தனி தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற ஒரு நோக்கத்தோடு,  அதிகார செயலோடு செயல்பட்டதன் காரணமாக பொதுக்குழுவில் எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படாமல்,  பொதுக்குழு முடிந்தது. பின்னர் ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழுவை கூட்டிய எடப்பாடி பழனிச்சாமி,  கட்சி விதியை மதிக்காமல், கட்சிக்கே கட்டுப்படாமல், கட்சியினுடைய சட்ட விதிகளை மீறி செயல்பட்டதால் நீதிமன்றத்தில் நீதி தேவதை இன்றைய தினம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

அதாவது ஜூன் 23ஆம் தேதிக்கு பிறகு என்ன நடந்ததோ, அதையெல்லாம் சொல்லி வைத்து அவர்கள் தற்காலிகமாக  தேர்ந்தெடுக்கப்பட்ட பதவியும்,  அவரால் நீக்கப்பட்ட செயல்களும்,  அவரால் நியமிக்கப்பட்ட பதவிகளும், எல்லாம் நிராகரிக்கப்பட்டு…  எப்பொழுதும் போல் கட்சி செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனிமேல் ஆண்டுக்கு ஒரு முறை தான் பொதுக்குழு நடத்த வேண்டும் என்கின்ற சட்ட விதிப்படி,  இனிமேல் இந்த ஆண்டு யாரும் பொதுக்குழுவோ, செயற்குழுவோ நடத்த முடியாது என்ற அளவுக்கு  நீதிமன்றம் நீதிபதி,  நீதி தேவதை,  தர்மத்தின் பக்கம்,  நியாயத்தின் பக்கம்,  சத்தியத்தின் பக்கம் அண்ணன் ஓபிஎஸ் அவர்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கி உள்ளார்கள். இதனை தலைவணங்கி ஏற்றுக் கொள்கின்றோம்,  அதிமுகவை கட்டி காப்போம் என தெரிவித்தார்.

Categories

Tech |