அமெரிக்காவில் இருந்து வரக்கூடிய செய்தியெல்லாம் நாம பார்க்கின்றோம். அங்கு என்ன நடந்தது என்றால் ஒருவர் கடைக்கு போயிட்டு 20 டாலர் கொடுத்து சிகரெட் வாங்கி இருக்கின்றார். அந்த கடைக்காரர் இந்த டாலரா பார்த்தா கள்ள நோட்டு மாதிரி இருக்குனு போலீசுக்கு போன் செய்து விட்டார். போலீஸ் வந்ததும் ஆயுதம் எதும் இல்லாமல் இருந்த அவரை பிடித்து மடக்கி கீழே தள்ளி அவர் அவரின் கழுத்தில் போலீஸ் கால்களை வைத்து நெரித்துள்ளார்கள். அவர் மூச்சு முட்டுது , மூச்சு முட்டுது என்று கதறுகிறார். அதையெல்லாம் கேட்காமல் 8 நிமிடம் அப்படியே நெரித்ததில் அவர் இறந்து விட்டார். அமெரிக்காவில் இது பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அமெரிக்கா பற்றி எரியக் காரணம் என்ன ?
அமெரிக்க மக்களை பொறுத்தவரை 75.5 சதவீதம் மக்கள் வெள்ளைத் தோலைக் கொண்ட மக்கள், 12.7 சதவீதம் மக்கள் கருப்பு தோலை கொண்டவர்கள். 1.3 சதவீதம் பேர் இந்தியர்களாக உள்ளனர். கருப்புத்தோல் தேகம் கொண்ட ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் நிற ரீதியாக சிறுபான்மையினர்.
ஆப்பிரிக்க அமெரிக்கர்களும் – அடிமைத்தனமும்:
சுமார் 500 வருட வரலாற்றை சுருக்கமாக பார்க்க போறோம். கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்த 1492 ஆம் ஆண்டுக்கு பின் அமெரிக்காவில் விவசாய தோட்டத்தில் வேலை செய்வதற்காக அடிமைகள் ஆப்பிரிக்காவில் கப்பல் மூலம் அமெரிக்காவிற்கு கொண்டு செல்லப்பட்டார்கள். அமெரிக்க சுதந்திர நாடாகப் பிரகடனம் செய்யப்பட்ட போது 1776ம் ஆண்டு அடிமைகளை மக்கள் வைத்துக்கொள்ள சட்டமே அவர்களுக்கு அனுமதித்தது.
அடிமைகளை வைத்தால் குற்றம்:
முதல் அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் வாஷிங்டன் 317 அடிமைகளை தன்வசம் வைத்திருந்தார். இரண்டாவது அதிபர் தாமஸ் ஜெபர்சன் 500க்கும் மேற்பட்ட அடிமைகளை வைத்து இருந்தார் என்று வரலாறு சொல்கிறது. ஆபிரகாம் லிங்கன் வந்தார். இவர்களுக்கு முற்றிலும் மாறுபட்டவர். ஆபிரகாம் லிங்கன் அமெரிக்க அதிபர் ஆனதும் ( 1863) அடிமைகளை வைத்திருப்பதை குற்றம் என சட்டம் கொண்டு வந்தார். இதனால் உள்நாட்டு கலவரம் வெடித்தது, தென்னமெரிக்கா ஒரு பக்கம் VS வடஅமெரிக்கா பக்கம்.
அதிபர் லிங்கன் கொல்லப்பட்டார்:
தென் அமெரிக்கா பக்கம் தொழிற்சாலை அதிகம் இருந்த காரணத்தால் அங்கு மெஷின் தான் அதிகம் வேலை செய்தது, மனிதர்கள் அதிகம் தேவை பட வில்லை. ஆனால் தென் அமெரிக்க பகுதியை எடுத்துக் கொண்டால் பெரிய பெரிய விவசாய தோட்டத்தில் வேலை செய்வதற்கு நிறைய அவர்களுக்கு அடிமை தேவைப்பட்டார்கள். ஆபிரகாம் லிங்கன் அதை எதிர்த்துப் பேசியதால் நடந்த உள்நாட்டுப் போரில் அதிபர் லிங்கன் ( 1865) சுட்டுக் கொல்லப்பட்டார்.
மார்ட்டின் லூதர் கிங்:
அடிமைத்தனம் ஒழிந்தாலும், அடிமை போல நடத்தும் மனப்பான்மை அமெரிக்காவில் ஒழியவில்லை என அங்குள்ள மக்கள் சொல்கிறார்கள். இதன் காரணமாக கருப்பு – வெள்ளை சம உரிமைக்கு குரல் கொடுத்த கறுப்பினத் தலைவர் மார்ட்டின் லூதர் கிங்கும் 1968 ஆம் ஆண்டு கொல்லப்பட்டார்.
வெள்ளைத்தோல் மக்கள் இன்னும் தங்களை அடிமைபோல் நடத்துவதாக கருப்பு தோல் மக்கள் குமுறுகிறார்கள். அவர்கள் பெரும்பான்மை, நாங்கள் சிறுபான்மை எங்களுடைய முன்னோர்கள் அடிமையாக இருந்த காரணத்தினால் நாங்கள் எல்லாம் அடிமையின் வாரிசுகள் என்பதால் எங்களை இன்னும் அடிமைகளாகவே பார்க்கும் மனப்பான்மை என்னும் அமெரிக்காவில் மாறவில்லை என கருப்பு தோல் கொண்ட மக்கள் குமுறுகிறார்கள். மீண்டும் ஒரு கருப்பினத்தவர் போலீஸ் பிடியில் கொல்லப்பட்டதால் அமெரிக்காவில் வெடித்தது கலவரம் இதுதான் 500 ஆண்டுகால வரலாறு மிக சுருக்கமாக உங்களுக்காக…