ஆணவக்கொலைகளை தடுக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசிடம் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தற்போது இந்தியாவில் ஆணவகொலைகள் அதிகரித்து வருகிறது. சமீபகாலமாக சாதிய ஆணவகொலைகள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து ஆவணக்கொலைகளை தடுப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் ஆணவக்கொலைகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது. எனவே இதற்கு கடுமையான சட்டங்களை இயற்றுமாறு பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் ஆணவ கொலைகளை தடுக்க உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என தமிழக அரசிடம் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ஆணவ கொலைகளை தடுக்க சிறப்பு பிரிவை தொடங்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவுக்கு அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.