இந்தியா முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகையானது சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த தீபாவளி பண்டிகையை அதிகாலையில் எழுந்து பொதுமக்கள் நல்லெண்ணெய் தேய்த்து குளித்து, பூஜை செய்து, புத்தாடைகள் அணிந்து, இனிப்புகளை அக்கம் பக்கத்தினருக்கு பகிர்ந்து, பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளனர்.
அதன் பிறகு தீபாவளி பண்டிகையை திரையுலகப் பிரபலங்களும் சிறப்பாக கொண்டாடியுள்ளனர். இந்நிலையில் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் தீபாவளி பண்டிகை தன்னுடைய குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார். இதற்கு முன்பு டிகர் ரஜினிகாந்தை பார்ப்பதற்கு அதிகாலையிலேயே ரசிகர்கள் அவர் வீட்டில் முன்பாக குவிந்தனர்.
இதனையடுத்து நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் இருந்து வெளியே வந்து ரசிகர்களை பார்த்து கையெடுத்து கும்பிட்டு பிளையிங் கிஸ் கொடுத்து தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார். ரசிகர்களும் ரஜினிகாந்துக்கு தலைவா ஹேப்பி தீபாவளி என்று வாழ்த்துக்களை தெரிவித்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய பேர குழந்தைகளுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடியுள்ளார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தன்னுடைய மகன்கள் இருவரையும் ஒரு நாற்காலியில் அமர வைத்து அவர்களின் காலில் மஞ்சளை தடவுகிறார். அப்போது நடிகர் ரஜினிகாந்த் பக்கத்தில் நின்று அதை ஆர்வமாக பார்த்துக் கொண்டிருக்கிறார். இது தொடர்பான புகைப்படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தன்னுடைய வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் இந்த புகைப்படமானது தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.