அடுத்த தேர்தல் பாஜக தலைமையில் தான் எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைக்கப்போகுது என்கிறார்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் ஆர். பி உதயகுமார்,
யூக செய்திகள், யூக கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்வதற்கு தகுதி எனக்கு கிடையாது. இதெல்லாம் தலைமையில் முடிவு செய்யக்கூடிய விஷயங்கள். எல்லோருடைய கருத்துக்களை சொல்வதற்கு அண்ணா திமுக கழகத்தில் இடம் உண்டு, கருத்து சுதந்திரம் உண்டு ,உரிமை உண்டு அவர்களின் அனுபவத்தின் அடிப்படையில் அண்ணன் அவர்களை பொறுத்தவரையில்கூட்டுறவு துறை அமைச்சர் ஒரு மூத்த இயக்கத்தினுடைய தொண்டராகவும்,
தலைவராகவும் அவருடைய கருத்தை சொல்வதற்கு அவருக்கு முழு உரிமை உண்டு. நீதிபதிகள் சொன்ன கருத்துக்கும் – இருதரப்பு சார்பிலும் அதற்கு பதில் தாக்கல் செய்யப்பட்டது, அதுவும் இருக்கிறது இந்த கருத்துக்கள் எல்லாம் உள்ளது. எதுவும் முடிவான கருத்தாக என்றும் ஏற்றப்படவில்லை, எல்லோருக்கும் கருத்து சொல்கின்ற உரிமை உள்ளது என தெரிவித்தார்.