உலகின் மூலை முடுக்கெல்லாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சுவாரசியமான விஷயங்கள் நடந்து கொண்டிருக்கிறது. இதில் ஒரு சில விடியோக்கள் இணையத்தில் வெளியிடப்பட்டு வைரலாகி வருகிறது. அதை போன்று தற்போது வனத்துறை அதிகாரியாக சுஷாந்த் நந்தா என்பவர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் வாத்து ஒன்று தன்னுடைய நாயிடம் இருந்து தன்னுடைய உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக நாய் முன்பு இறந்தது போல அப்படியே படுத்து கிடக்கிறது.
நாய் அங்கிருந்து நகர்ந்த பிறகு தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடுகிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. வாத்தின் சாமர்த்தயத்தை கண்டு நெட்டிசன்கள் வியப்படைந்துள்ளனர்.
Playing dead is a behavior in which animals take on the appearance of being dead.
This form of animal deception is an adaptive behavior also known as tonic immobility or thanatosis. Apparent death can be used as a defense mechanism or as a form of aggressive mimicry by animals. pic.twitter.com/58bCTFwoCO
— Susanta Nanda (@susantananda3) January 10, 2021