உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் உலகளவில் 18 நாடுகளில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.
நாடுகளை 200க்கும் மேற்பட்ட நாடுகளை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா பாதிக்காதா நாடுகள் உள்ளதா ? என்ற கேள்வி எழுகிறது. ஆம் 18 நாடுகளில் கொரோனா கால் பாதிக்கவே வைக்கவே இல்லை என்பதை அறியலாம்.
எந்தெந்த நாடுகள் என்பதை பார்க்கலாம்:
வடகொரியாவில் கொரோனா பாதிப்பு அறவே இல்லை என்று சொல்லப்படுகின்றது. இது பற்றி எந்த தகவலும் வெளி உலகிற்கு வரவில்லை. அதே போல போரால் கடும் பாதிப்புகளை சந்தித்து வரும் சிரியாவிலும் கொரோனா பாதிப்பு இல்லை. சிறு தீவுகள் பல கொரோனா எட்டாத நாடுகளாக உள்ளன. எந்தெந்த நாடுகளில் கொரோனா பாதிப்பு இல்லை என்று அறியலாம் .
கொமோரோஸ்,
கிரிபாட்டி,
லெசேத்தோ,
மார்ஷல்ஸ் தீவுகள்,
மைக்ரேனேசியா,
நவுரு,
வடகொரியா,
பாலோ,
சாவ் தோமே மற்றும் பிரின்சிபி,
சாலமோன் தீவுகள்,
தெற்கு சூடான்,
தஜிகிஸ்தான்,
டோங்கா,
துர்க்மேனிஸ்தான்,
துவாலு,
வனாட்டு மற்றும் ஏமன்
இந்த நாடுகளில் கொரோனா பாதிப்பே இல்லாததற்கு சுற்றுலா பயணிகள் வருகை மிக மிகக் குறைவு என்பதே முக்கிய காரணம். வட கொரியா போல பிற நாடுகளில் இருந்து விலகி இருப்பது, புவியியல் ரீதியாக பிறநாடுகளில் இருந்து வெகு தொலைவில் இருப்பது, சுற்றுலாப்பயணிகளை ஏற்காத எளிய இடங்கள் போன்றவற்றால் இந்நாடுகளில் கொரோனா எட்டவில்லை.