தமிழகத்தில் எட்டாம் கட்ட ஊரடங்கு நாளையுடன் முடிவடைய இருக்கும் நிலையில் மாவட்ட ஆட்சியருடன் முதல்வர் ஆலோசனை நடத்து கின்றார்.
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு நாளையுடன் முடிவடைய இருக்கும் நிலையில் இதனை நீட்டிக்கலாமா ? மேலும் எதுபோன்ற தளர்வுகள் அளிக்கலாம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து தமிழக முதலமைச்சர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தற்போதைய ஆலோசனை மேற்கொண்டு இருக்கிறார். பல்வேறு தளர்வுகளை ஏற்கனவே தமிழக அரசு அறிவித்துள்ளது. குறிப்பாக மாநிலத்திற்கு பொதுப்போக்குவரத்து, மெட்ரோ ரயில் சேவை என பல்வேறு தளர்வுகள் இருந்து வருகின்றன.
அதே போல கொரோனா நோய் தொற்று தொடர்ச்சியாக அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பல மாவட்டங்களில் எடுக்கப்பட்டுள்ள தடுப்பு நடவடிக்கைகள் ? முன்னெச்சரிக்கைகள் என்னென்ன ? என்பது குறித்து விரிவாக மாவட்ட ஆட்சியருடன் தமிழக முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டு இருக்கிறார். ஒவ்வொரு மாவட்டத்திலும் எடுக்கப்பட்டுள்ளதாக தடுப்பு நடவடிக்கை, கொரோனா சிகிச்சை முறைகள், மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்டுள்ள படுக்கை வசதிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியருடன் முதலமைச்சர் விரிவாக ஆலோசனை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை அதிகரித்தால் அதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், நோயாளிகளின் எண்ணிக்கையை உயர்த்தால் பரிசோதனைகளை அதிகரிப்பது, சிகிச்சை மையங்களை மேலும் தயார்படுத்துவது உள்ளிட்ட அம்சங்கள் பற்றி இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கபடுகிறது. தற்போதைய நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு என்பது அடுத்த மாதம் அக்டோபர் மாதம் நீட்டிக்க பொதுமவாய்ப்புள்ளதாக தெரிகின்றது.
மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு எந்த பாதிப்பு ஏற்படாத வகையில் கட்டுப்பாடுகளும், தளர்வுகளும் அறிவிக்கப்படும். இன்று மதியம் 2.45 மணிக்கு மருத்துவ நிபுணர் குழுவினரிடம் முதல்வர் ஆலோசனை மேற்கொண்ட பிறகு தான் எது போன்ற நடவடிக்கை என்று தெரியவரும்.