நாடு முழுவதும் 46 வது நாளாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த நிலையில் மத்திய அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகள் படி, கடந்த 4 ம் தேதி முதல் தமிழகத்தில் சிறு, குறு தொழில் நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள், தனிகடைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டது. மேலும், ஊரடங்கு முடிந்ததும் அரசு பேருந்துகள் இயங்க அனுமதி வழங்கியுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் மேலும் சில ஊரடங்கு தளர்வுகளை அமல்படுத்தியுள்ளது. அவை பின்வருமாறு,
* சென்னையில் தனியார் நிறுவனங்கள் 33% பணியாளர்களுடன் காலை 10.30 முதல் மாலை 6 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
* மற்ற பகுதிகளில் தனியார் நிறுவனங்கள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படலாம்.
* சென்னையில் பிற தனிக்கடைகள் காலை 10.30 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்பட அனுமதி.
* தமிழகத்தின் மற்ற பகுதிகளில் பிற தனிக்கடைகள் காலை 10 மணி முதல் இரவு 7 அணி வரை செயல்படலாம்.
* சென்னையில் பெட்ரோல் பம்புகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்பட அனுமதி.
* சென்னையை தவிர்த்து தமிழகம் முழுவதும் பெட்ரோல் பங்குகள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படலாம்.
* தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள பெட்ரோல் பங்குகள் 24 மணி நேரமும் செயல்படலாம்.
* தமிழகம் முழுவதும் பார்சல் முறையில் காலை 6 மணி முதல் 7 மணி வரை விற்பனையில் ஈடுபட டீ கடைகளுக்கு அனுமதி.
* டீ கடைகளில் தவறாமல் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். 5 முறை கிருமி நாசினி தெளிக்க வேண்டும்.
* நிபந்தனைகளை கடைபிடிக்க தவறும் டீ கடைகள் உடனடியாக மூடப்படும்.
* தமிழகம் முழுவதும் திங்கட்கிழமை முதல் காய்கறி கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதி.
இந்த அனைத்து தளர்வுகளும் மே 11 முதல் நடைமுறைக்கு வரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட அனைத்து தளர்வுகளும், தடைகளும் மறு உத்தரவு வரும் வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.