Categories
அரசியல்

தமிழகத்தில் பொதுமுடக்க தளர்வுகள் என்னென்ன…? – வெளியாகிய தகவல் …!!

தமிழகத்தில் பொதுமுடக்கத்தில் அடுத்த கட்ட தளர்வுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அறிவிக்க உள்ளார்.

என்னென்ன தளர்வுகள் அறிவிக்கப்படலாம் ?

நாடு முழுவதும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் நான்காம் கட்ட பொதுமக்கள் தளர்வு அமலுக்கு வருகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை சார்ந்தே தமிழகத்திலும் பொதுமுடக்க தளர்வுக்கான அறிவிப்பு வெளியாக இருக்கிறது. இன்று முதல்வர் இதற்கான அறிவிப்பை அதிகாரபூர்வமாக அறிவிக்க இருக்கிறார். இதில் என்னென்ன தவறுகள் இருக்கும் என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் கடைகள் திறக்கப்படும் நேரம் அதிகரிக்க வாய்ப்பு.

கூடுதலாக ஒரு மணி நேரம் கடைகள் திறக்க அனுமதிக்க படலாம்.

தமிழகத்திலும் இ- பாஸ் முறை ரத்து செய்யப்பட வாய்ப்பு என தகவல்

பொதுப் போக்குவரத்து தொடங்க வாய்ப்பு இருப்பதாக தகவல்.

படப்பிடிப்புகளை கட்டுப்பாடுடன் அனுமதிக்க வாய்ப்பு.

பொது நிகழ்ச்சிகளை அனுமதிக்கும் அறிவிப்புகளும் வெளியாகலாம்.

இதுவெல்லாம் செப்டம்பர் 15 முதல் அமலுக்கு வரலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |