சென்னையில் வரும் 19ம் தேதி முதல் அதிகாலை 12 மணி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
முழு ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே கட்டுப்பாடுகளுடன் அனுமதி என அறிவித்துள்ளது. மேலும், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. திருவள்ளூர் நகராட்சி பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அதேபோல, கும்மிடிபூண்டி, பொன்னேரி மற்றும் மீஞ்சூர் பேரூராட்சிகளிலும் முழு ஊரடங்கு அமலுக்கு வரும்.
செங்கல்பட்டு, மறைமலை நகர் நகராட்சிகளிலும் முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது. நந்திவரம், கூடுவாஞ்சேரி பேரூராட்சிகளிலும், காட்டங்குளத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்கும் முழு ஊரடங்கு அமலுக்கு வரும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என அரசு அறிவித்துள்ளது.
இந்த 4 மாவட்டங்களிலும் 19ம் தேதி முதல் 30ம் தேதி வரை 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 21 மற்றும் 28ம் ஆகிய இரு ஞாயிற்றுக்கிழமைகளில் எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 20ம் தேதி நள்ளிரவு முதல் 22ம் அதி காலை வரை எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் பின்வருமாறு:
* சரக்கு போக்குவரத்து, அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்ல எந்த தடையும் இல்லை.
* முழு ஊரடங்கில் மருத்துவ பணிகள் மற்றும் சேவைகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்படுகிறது.
* அவசர தேவைகளுக்கு மட்டுமே ஆட்டோ, டாக்ஸி போன்றவை அனுமதிக்கப்படும்.
* சென்னை பெருநகர காவல் எல்லையில் மாநில அரசுத்துறைகள் 33% பணியாளர்களுடன் தொடர்ந்த செயல்படும்.
* சென்னை பெருநகர காவல் எல்லையில் மத்திய அரசு அலுவலகங்கள் 33% பணியாளர்களுடன் இயங்கும்.
* சென்னை காவல் எல்லையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள அரசு ஊழியர்கள் பணிக்கு வர தேவையில்லை.
* ரேஷன் கடைகள் காலை 8 மணி முதல் மத்திய 2 மணி வரை மட்டுமே செய்லபடும். சென்னை பெருநகர காவல் எல்லையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் கடைகள் இயங்காது.
* காய்கறி கடைகள், பெட்ரோல் நிலையங்கள் காலை 6 முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே இயங்கும்.
* அத்தியாவசிய பொருள் வாங்க பொதுமக்கள் வாகனங்களில் வரக்கூடாது. நடந்து சென்றே பொருட்கள் வாங்க வேண்டும்.
* உணவகங்களில் பார்சல் முறையில் மட்டுமே விற்பனைக்கு அனுமதி.
* டி கடைகளுக்கு அனுமதி இல்லை.
* உரிய அனுமதி பெற்று உணவு டெலிவரி செய்யும் ஆன்லைன் நிறுவனங்கள் செயல்பட அனுமதி.
* சென்னையில் அம்மா உணவகம் தொடர்ந்து செயல்படும்.
* பணி நடைபெறும் இடத்தில் தொழிலாளர்கள் தங்கியிருந்து பணியாற்றும் கட்டுமானப் பணிகளுக்கு தடை இல்லை.
* முழு ஊரடங்கு அமலில் உள்ள 12 நாட்களில் தொழிலாளர்கள் தினமும் வீடு – தொழிற்சாலை சென்று வந்து பணிபுரியும் முறைக்கு அனுமதி இல்லை.
* சென்னையில் இருந்து, திருமணம், மருத்துவம், இறப்பு போன்றவற்றிற்கு செல்பவர்கள் உரிய ஆவணங்கள் சமர்ப்பித்தால் மட்டுமே இ-பாஸ்.
* வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வரும் ரயில் விமானங்களுக்கு தற்போதைய நடைமுறை தொடரும்.
* அரசின் அனுமதியுடன் தனியார் தொண்டு நிறுவனங்கள் செயல்படலாம்.
* வங்கிகள் வரும் 29 மற்றும் 30ம் தேதிகளில் மட்டுமே 33% பணியாளர்களுடன் செயல்பட அனுமதி.
* ஏடிஎம் எந்திரங்கள் செயல்பட எந்த தடையும் இல்லை.