Categories
சினிமா தமிழ் சினிமா

அட!…. என்னப்பா சொல்றீங்க….. பிக்பாஸ் வீட்டுக்குள் மீண்டும் அசல் வரப்போகிறாரா….? லீக்கான தகவல்….. ஆனா ஒரு டுவிஸ்ட்‌ இருக்கு….!!!!!

பிரபலமான தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த போட்டியில் 21 போட்டியாளர்கள் இருந்த நிலையில், ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்ற ஜி.பி முத்து தானாகவே நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். அதன் பிறகு சாந்தி, அசல், ஷெரினா மற்றும் மகேஸ்வரி ஆகியோர் நிகழ்ச்சியை விட்டு எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் பார்வையாளர்களிடம் அதிக வெறுப்பை பெற்றவர் என்றால் அது அசல் தான். ஏனெனில் அசல் கோலார் பெண்களிடம் முகம் சுளிக்கும் வகையில் நடந்து கொண்டது பார்வையாளர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்திய நிலையில் அவரை நிகழ்ச்சியை விட்டு வெளியேற்ற வேண்டும் என பலரும் கூறினர்.

ஆனால் வீட்டை விட்டு வெளியேறிய அசல் தான் எந்த பெண்ணிடமும் தவறாக நடந்து கொள்ளவில்லை என்று வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்தார். இந்நிலையில் வைல்ட் கார்டு என்ட்ரியாக அசல் மீண்டும் வீட்டுக்குள் நுழையப் போவதாக ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் நிவாஷினி வீட்டை விட்டு வெளியேறினால் தான் அசல் வருவார் என்றும் கூறப்படுகிறது. மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |