டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அருண் ஜெட்லியை நலம் விசாரிக்க பிரதமர் மோடி வருகை தர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்த பிறகு அவர் அரசிலிருந்து விலகி அருண் ஜெட்லியின் உடல் நிலை தொடர்ந்து பாதிக்கப்பட்டு வந்ததை தொடர்ந்து கடந்த 9ம் தேதி அருண் ஜெட்லி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரின் உடல் நிலையானது மிகுந்த கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றது. தொடர்ச்சியாக அருண் ஜெட்லிக்கு தீவிரமாக உயிர் காக்கும் கருவி மூலம் பல்வேறு சிகிச்சைகளை மருத்துவ குழுவினர் அளித்து வருகின்றனர்.
மருத்துவ குழுவினர் தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த போதிலும் கடந்த இரண்டு நாட்களாக அவரின் உடல்நிலை மிகவும் மோசமாக அடைந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவிக்கின்றன. இதையடுத்து மூத்த அரசியல் கட்சித் தலைவர்கள் தொடர்ச்சியாக அவரது உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்குவருகை புரிந்த வண்ணம் உள்ளனர்.
இன்று கூட டெல்லி மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மோகன் பகவத் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மூத்த மத்திய அமைச்சர்களான ராம் பஸ்வான் , ஸ்மிருதி இரானி ஆகியோர் உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக எய்ம்ஸ் மருத்துவமனை வந்தனர். இந்த நிலையில் தற்போது அவரின் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி இரவு 8 மணியளவில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வர உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.கடந்த இரண்டு நாட்களாக பூட்டான் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு இன்று மாலை 5 மணியளவில் டெல்லி திரும்பிய மோடி உடனடியாக மருத்துவமனை செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதுஅவருடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் நேரடியாக வர இருக்கின்றார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அருண் ஜெட்லி உடல்நிலை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில் பிரதமர் மோடி அருண் ஜெட்லி உடல்நிலை குறித்து விசாரித்த பின் அறிக்கை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.