நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசும் போது, உயிர் காக்கின்ற மருத்துவத்திற்கு காப்பீடு இலவசமா கொடுத்தாங்க. அதுக்கு ஏது காசு ? அய்யா கருணாநிதி காப்பீடு, அம்மையார் ஜெயலலிதா காப்பீடு. இது உங்கள் பரம்பரை சொத்து பல்லாயிரம் ஏக்கரை விற்றுவிட்டு எங்களுக்கு கொடுக்கிறீர்களா? எது இந்த காசு? இலவசங்களில் கொடுக்கின்ற பணத்தை, இழக்கின்ற பணத்தை எப்படி ஈட்டுகிறீர்கள் என்பதற்கு பதில் இருக்கிறதா?
இது எப்படி வளர்ச்சி ஆகும் ? இலவசம் பெற வேண்டிய ஏழ்மை, வறுமையில் இல்லாத நிலைக்கு மக்களின் வாழ்கை தரத்தை உயர்த்துவதற்கு பெயர்தான் வளர்ச்சி. அப்படி ஏதாவது திட்டம் இருக்கிறதா ?அப்படி ஒரு திட்டத்தை நோக்கி என் அரசு என் நாடு கால் எடுத்து வைக்கிறதா ? தமிழ்நாடு அரசு மட்டுமல்ல ஒட்டுமொத்தமாகவே கேட்கிறேன். இந்திய ஒன்றிய அரசையே கேட்கிறேன்.
இலவசம் கொடுப்பதை எதிர்க்கின்ற பாரதிய ஜனதா எதற்கு வேளாண்குடி மக்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் மானியம் கொடுக்கிறீர்கள் ? அதுவும் ஒரு வித ஏமாற்றம் தான், வேளாண் குடி மக்களை கையேந்துகின்ற நிலைக்கு வைத்தது யார்? அதெல்லாம் ஆழமாக சிந்தித்துப் பார்க்க வேண்டும். இதற்கு வெளிநாட்டில் படித்து விட்டு வந்து,
இப்படித்தான் வெளிநாட்டில் எல்லாம் இலவசம் கொடுத்து இருக்கிறார்களா ? கிராமப்புறங்களில் இருந்து மாணவ, மாணவிகள் இலவச சைக்கிளை வைத்துக் கொண்டு தனியார் பள்ளி கல்லூரிகளுக்கு வந்தார்களா? அரசு பள்ளி கல்லூரிக்கு வந்தார்களா? 10,000பள்ளி கட்டிடம் இடிகின்ற நிலையில் இருக்கிறது என்று பேட்டி கொடுத்தது நானா? பள்ளி கல்வித்துறை அமைச்சரா? என கேள்வி எழுப்பினார்.