Categories
அரசியல் மாநில செய்திகள்

நீங்க என்ன ஜாதி ? ஒருவாட்டி திருநெல்வேலி போனா…. உடனே தெரிஞ்சுரும் : துரைமுருகன் கலகல பேச்சு …!!

நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியை சேர்ந்த துரைமுருகன், எங்கள் ஊரில் திருநெல்வேலியில் போனால் கண்டுபிடித்துவிடலாம்.  தமிழ்நாட்டில் எவனாவது ஒருவன் அரசியலில் வந்தால்,  தமிழ்நாட்டில் எவனாவது ஒருவன் சினிமாவிற்கு நடிக்க வந்தால் எந்த ஜாதி என்று குழப்பம் வந்தால் ? திருநெல்வேலிக்கு ஒருவாட்டி போயிட்டு வந்தா தெரிஞ்சுரும்.

ஜெயம் ரவி இன்ன ஆளுங்க, விஜய் சேதுபதி இன்ன ஆளுங்க, விஜய் இன்ன ஆளுங்க. ஏனென்றால் அவர் ஒட்டிருவான் கல்யாண போஸ்டரில்…  ஒரு அருவாளுடன் போட்டிருப்பான். கல்யாண வீட்டுக்கு போகிறதா அல்லது திரும்பிப் போறதா ? என்று தெரியாது. ஒரு அரிவாளுடன் போட்டிருப்பான். முத்துராமலிங்க தேவர் படம் போட்டு, இந்த பக்கம் சிங்கம்.

முத்துராமலிங்க தேவருக்கும் சிங்கத்திற்கும் என்ன சம்பந்தம் ? அன்பே ஒரு மொழியாக பேசிய மாமேதை முத்துராமலிங்க தேவர் பக்கத்தில் சிங்கத்தை போட்டு, அருவாளை போட்டு,  மீசையை முறுக்கி விட்டு, ஆண்ட பரம்பரை…. நீ ஆண்ட பரம்பரை. ஆளுரியா ? அதுதான் கேள்வி. ஆண்ட பரம்பரை ஒருகாலத்தில்…  இப்பொழுது நோ,  அதுக்கு தான் இந்த குடி வாரி கணக்கெடுப்பு.

எதற்கு உன்னை ஆள வைப்பதற்காக இந்த குடிவாரி  கணக்கெடுப்பு. அதுக்கப்புறம் சொல்லலாம்… குடிவாரி கணக்கெடுப்பு எடுத்த பிறகு நாங்கள் ஆண்ட பரம்பரை என்று சொல்வதற்காக தான் இந்த குடிவாரி கணக்கெடுப்பு. ஏன் அச்சபடுகின்றான் ? ஏன் பயப்படுகிறான் ? தமிழ்நாட்டிலேயே மிக மிகச் சிறுபான்மையாக இருக்கின்ற தெலுங்கு 7 அமைச்சர்கள் + 2 . + 2 யாரு ?  கோபாலபுரம்.

சிறுபான்மையாக இருக்க கூடிய தெலுங்கர்களுக்கு  9 அமைச்சரவை. ஆனால் தேவருக்கு எத்தனை அமைச்சரவை ?  தேவேந்திரர்களுக்கு எத்தனை அமைச்சரவை ? முத்தரையர்களுக்கு எத்தனை அமைச்சரவை ? முத்தரையர்களுக்கு இருந்தது ஒரே ஒரு அமைச்சரவை மரியாதைக்குரிய மெய்யானதன். அதையும் பிடுங்கிக் கொண்டு போய்விட்டார்கள். அவர்கள் ஐயா இளைய ஜமீன்தார் புடுங்கிட்டு போயிட்டாரு என தெரிவித்தார்.

Categories

Tech |