Categories
உலக செய்திகள்

ராணி எலிசபெத் மறைவுக்கு பின் பிரிட்டனில் நடக்கப் போகும் மாற்றங்கள் என்னென்ன ?

70 ஆண்டு காலமாக பிரிட்டன் நாட்டின் இராணியாக ஆட்சி புரிந்த இரண்டாம் குயின் எலிசபத் கடந்த செப்டம்பர் 8-ஆம் தேதி தனது 96 வது வயதில் காலமானார். இதனை பக்கிங்காம் அரண்மனை அதிகாரப்பூர்வமாகவே  அறிவித்தது. இராணி எலிசபெத்தின் மறைவிற்கு  உலக நாடுகளின் தலைவர்கள் தொடங்கி பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இப்படி இருக்கையில் இராணியின் மறைவிற்குப் பிறகு மூன்றாம் சார்லஸ் இங்கிலாந்தின் மன்னராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

இந்த நிலையில் குயின் எலிசபத்தின் மறைவிற்குப் பிறகு தங்களது பாஸ்போர்ட் செல்லுமா? என பிரிட்டன் வாசிகள் ட்விட்டரில் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். அதன்படி பயனர் ஒருவர் இராணியின் மறைவை அடுத்து பாஸ்போர்ட் செல்லுமா? அல்லது மாறுமா?  என டுவீ ட்  செய்திருக்கிறார்.  அதேபோல இராணி தற்போது இறந்துவிட்டார் அப்போது பாஸ்போர்ட் மாற்றப்பட வேண்டியது அவசியமா?  ஏனெனில் இதுநாள்  வரை எலிசபத்தின்  ஆட்சியின் கீழ் இருந்ததாகவே பாஸ்போர்ட்டில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது என கேட்கப்பட்டிருக்கிறது.

மூன்றாம் சார்லஸ் இங்கிலாந்தின் மன்னராக அறிவிக்கப்பட்டதால் எதிர்காலத்தில்  மாற்றப்படும் என்றாலும் பாஸ்போர்ட்டின் காலாவதி தேதி முடிந்த பின்னரே புதுப்பிக்கப்பட வேண்டும். அதேபோல பிரிட்டனின் நாணயம் , முத்திரை போன்றவையும் இரண்டாம் எலிசபத் மறைந்ததால் மூன்றாம் சார்லஸின் பேரில் புதுப்பிக்கப்படும்.  இதுபோக காட் சேவ் தி குயின் ( God Save The Queen ) என்பதாக  இருந்த பிரிட்டனின் தேசிய கீதம் இனி  ( God Save The King) காட் சேவ் தி கீங் ஆக  மாற்றப்படும் .

முன்னதாக தன்னுடைய பெயரிலேயே பாஸ்போர்ட் வழங்கப்பட்டதால் இதுநாள்  வரையில் குயின் எலிசபத்திற்கு பாஸ்போர்ட்டே  இருந்ததில்லை. இருப்பினும் அரச குடும்பத்தை சேர்ந்த இராணியின் முன்னாள் கணவர் ஈடின்பர்க் உட்பட அனைவருக்கும் பாஸ்போர்ட் முக்கியமானதாக இருந்தது. இதன் மூலம் பிரிட்டனின் மன்னராக போகும் மூன்றாம் சார்லசும் பாஸ்போர்ட் இல்லாமல் உலா வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Categories

Tech |