Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

திமுக செய்ததென்ன ? விவாதிக்க தயாரா ? திமுகவுக்கு அமித் ஷா சவால் ..!!

சென்னைக்கு வந்து பல திட்டங்களை தொடங்கி வைத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ். தலைமையில் தமிழகம் மிகுந்த முன்னேற்றம் கண்டு வருகிறது – அமித் ஷா, உள்துறை அமைச்சர்மத்திய அரசின் திட்டங்களை சிறப்பாக அமல்படுத்தும் மாநிலமாக தமிழகம் விளங்குகிறது – அமித் ஷா, உள்துறை அமைச்சர்கொரோனா தடுப்பு மட்டுமல்ல, நிர்வாகத் திறனிலும் தமிழகம் இந்த ஆண்டு முதலிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி தொடரும் என்ற நம்பிக்கை உள்ளது.

திமுக தலைவர் அடிக்கடி மத்திய அரசு தமிழகத்திற்கு அநீதி அளித்துள்ளதாக கூறுகின்றார். 10 ஆண்டுகள் மத்திய அரசில் அங்கம் வகித்த திமுக என்ன செய்திருக்கிறது ? என பட்டியலிடுங்கள். தமிழகத்துக்கு நாங்கள் செய்தவற்றை பட்டியலிட தயார். திமுக விவாதிக்க தயாரா என கேள்வி எழுப்பிய அமித்ஷா, தமிழகத்துக்கு மன்மோகன் அரசு 16 ஆயிரத்து 355 கோடி ஒதுக்கீடு செய்தது. பிரதமர் மோடி அரசு தமிழகத்துக்கு 32 ஆயிரத்து 750 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது என அமித்ஷா கூறினார்.

 

Categories

Tech |