Categories
கிரிக்கெட் விளையாட்டு

அவர் என்னா பண்ணிட்டாரு? – கங்குலி ‘நச்’ பதில் …….!!

BCCI_யின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கங்குலி, தற்போதைய இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு நெத்தியடி பதில் அளித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி போட்டியின்றி தேர்வு செய்யப்ப  ட்டுள்ளார். அவர் வரும் 23ஆம் தேதி அப்பதவியில் பொறுப்பேற்கவுள்ளார். இந்தச் சூழலில் கொல்கத்தாவில் செய்தியாளர்களைச் சந்தித்த சவுரவ் கங்குலி அங்கு செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார்.

Image result for ganguly

அப்போது ஒரு செய்தியாளர் ரவி சாஸ்திரியிடம் பேசினீர்களா என்று கேட்க அதற்கு கங்குலி, ‘ஏன்? அவர் இப்போது என்ன செய்துவிட்டார்?’ என்று சிரித்துக்கொண்டே பதில் கூறினார். நன்னெறி அலுவலர் தலைமைப் பயிற்சியாளர் நியமனத்தில் விருப்பம் தெரிவிக்காதபோதும், கிரிக்கெட் ஆலோசனைக் குழு தேவையில்லாமல் ரவி சாஸ்திரியை மீண்டும் அப்பதவியில் நியமித்துள்ளது என்றார்.

Image result for ravi shastri

ரவி சாஸ்திரி, கங்குலி இடையிலான உறவு 2016ஆம் ஆண்டு முதலே பிளவுபட்டுதான் உள்ளது. அப்போது கிரிக்கெட் ஆலோசனைக் குழுவிலிருந்த கங்குலி ரவி அனில் கும்ப்ளேவை இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக தேர்வு செய்தார்.

இதனால் அப்பதவிக்கு விண்ணப்பித்திருந்தும் தன்னை தேர்வு செய்யாததால் ரவி சாஸ்திரி கங்குலி மீது குற்றஞ்சாட்டினார். அதைத் தொடர்ந்து இதற்கு கங்குலி, ‘கும்ப்ளேவை தேர்வு செய்ததற்கு நான்தான் காரணம் என்று எண்ணினால் ரவி சாஸ்திரி முட்டாள்களின் உலகத்தில் வாழ்கிறார் என்று அர்த்தம்’ என்று பதிலடி கொடுத்தது நினைவுகூரத்தக்கது.

Categories

Tech |