Categories
சினிமா தமிழ் சினிமா

விமல் என்ன ஏமாத்திட்டாரு…. பாதிக்கப்பட்டவர் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கடிதம்…!!

நடிகர் விமல் தன்னை பண மோசடி செய்ததாக கூறி நபர் ஒருவர் திமுக தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

தமிழ் சினிமாவில் கலகலப்பு, மன்னர்வகையறா போன்ற பல படங்களில் நடித்தவர் விமல். இந்நிலையில் விமல் தன்னை மோசடி செய்ததாக கூறி நபர் ஒருவர் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், “என் பெயர் திருநாவுக்கரசு.நான் பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு தியேட்டரை குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தேன். அப்போது எனக்கு நடிகர் விமலுடன் பழக்கம் ஏற்பட்டது.

அதன் பிறகு விமல் மன்னர்வகையறா படத்தை இயக்குவதற்காக என்னிடம் 50 லட்சம் ரூபாய் கடன் கேட்டார். அதன்படி நானும் எனது வீட்டை அடமானம் வைத்து அவருக்கு பணம் கொடுத்தேன். அதற்கு பதிலாக அவர் எனக்கு 80 லட்சம் காசோலை கொடுத்து படப்பிடிப்பு முடிந்தபின் வங்கியில் பணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு கூறினார்.

ஆனால் படப்பிடிப்பு முடிந்த பிறகு நான் வங்கியில் செலுத்திய காசோலை பணம் இல்லாமல் திரும்பி வந்தது. இதனால் நான் விமலிடம் இது குறித்து கேட்டேன். ஆனால் அவர் பணம் தராமல் என்னை ஏமாற்றி வருகிறார். இதனால் எனது வீட்டை விற்று நான் என் கடன் அனைத்தையும் அடைந்து விட்டேன். இப்பொழுது நான் நடுத்தெருவில் நிற்கிறேன்.

இந்நிலையில் திமுக சார்பில் விமலின் மனைவி மணப்பாறை பகுதியில் போட்டியிடப் போவதாக தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். “ஸ்டாலின் தான் வராரு, விடியல் தர போறாரு” என்ற நம்பிக்கையுடன் தங்களுக்கு இந்த கடிதத்தை எழுதுகிறேன்” என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |