Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

நான் என்ன டாக்டரா ? கடவுளுக்கு தான் தெரியும் – தமிழக முதல்வர் பதில் …!!

கொரோனா எப்போது குறையும் என்று கடவுளுக்குத்தான் தெரியும் என்று தமிழக முதல்வர் தெரிவித்தார்.

வேளச்சேரியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், கொரோனாவை கட்டுப்படுத்த அரசு கடுமையான முயற்சி எடுத்து வருகின்றது. இந்த வைரஸ் வருவதை தடுப்பதற்காக பல குழுக்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றது. என்னுடைய தலைமையிலே பலமுறை கொரோனா வைரஸ் தடுப்பு பணி குறித்து மூத்த அமைச்சர்கள், மருத்துவ நிபுணர்கள், உயர் அதிகாரிகள், ஐபிஎஸ் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் பல முறை நடத்தப்பட்டு மருத்துவ நிபுணர்கள் இது குறித்து கொடுக்கின்ற வழிகாட்டுதல்படி அரசு இந்த கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இது  புதிய நோய், இந்த நோய் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் மூலமாகவும், வெளி மாநிலத்தில் இருந்து தமிழகம் வந்தவர்கள் மூலமாகத்தான் தமிழகத்திலே ஆரம்ப காலகட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.அவர்களை நாம் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுத்தி,  அவர்களை கண்டறிந்து, அவர்களை குணப்படுத்துகின்றோம். அதோடு அவரோடு யார் யார் தொடர்பில் இருந்தார்களோ, அவர்களையும் பரிசோதனைக்கு உட்படுத்த்தி  நோய் தொற்றில் இருந்து காப்பாற்றுகின்றோம்.

கொரோனா எப்போது போகும் என்று இறைவனுக்குத் தான் தெரியும்.  நான் என்ன டாக்டரா ? மருத்துவ நிபுணர்கள் சொல்றாங்க, இது படிப்படியாக தான் குறையும்,  ஒழிக்க முடியும் என்று.   இந்த நோயை தடுக்கமுடியும், ஒழிக்க முடியாது என்று உலக சுகாதார அமைப்பு சொல்லுது. மத்திய சுகாதாரத் துறை சொல்லுது, நம்முடைய மருத்துவ குழு நிபுணர்களும் சொல்லுறாங். இதற்கு ஒரே வழி, நாம் ஒவ்வொருவரும் இந்த நோயின் தன்மையை அறிந்து, வீரியத்தை அறிந்து கட்டுப்படுத்தி இருந்தால்  நோய் பரவலை தடுக்க முடியும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Categories

Tech |