செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தலைவர்களில் ஒருவரான கரு.நாகராஜன், அழுகிய முட்டை இருக்கிறது என இந்த பேச்சு தொடங்கியது. இது பிஜேபி மட்டும் சொன்ன குற்றச்சாட்டு அல்ல, எல்லா பத்திரிக்கையிலும், சமூக ஊடகங்களிலும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து, கடலூர் மாவட்டம், திருவண்ணாமலை மாவட்டம் ஒவ்வொரு பகுதிகளிலும் பள்ளிக்கூடங்களில் வழங்கப்படுகின்ற முட்டை எல்லாம் அழுகிய முட்டையாக இருக்கிறது என்பது செய்தி என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
திட்டமிட்டு இந்த மாதிரி ஒரு சம்பவமே நடக்காததை போலவும், அதைப்பற்றி எங்களுடைய பாஜக தலைவர்கள் விமர்சனம் செய்ததைப் போலவும் தூத்துக்குடி தமிழ்நாடு சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பேசியிருப்பது மிக மிக கண்டிக்கத்தக்கது. அழுகிய முட்டை சாப்பிட்டதால் பிள்ளைகள் வாந்தி எடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதை நாம் பார்த்தோம். கடலூர் மாவட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல இடங்களில் இது போன்ற சம்பவங்கள் நடைபெற்றது. பள்ளி மாணவ குழந்தைகள் எல்லாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள்.
அதைப்பற்றி அவர்கள் விமர்சிக்கும் போது எங்கள் மாநிலத் தலைவரை, அவர் இருந்துக்கு மேல் பேசக்கூடாது. பேசினால் மேடை ஏறி வருவோம் என்று… மேடை ஏறி வந்து என்ன செய்வீர்கள் ? மைக்கை சரி பண்ண போறீர்களா ? என்று தெரியவில்லை. மேடை ஏறி வந்து பாஜக மாநில தலைவரை…..
ஒரு அகில இந்திய ஆளுங்கட்சியாக இருக்கக்கூடிய பாரதிய ஜனதா கட்சியினுடைய மாநில தலைவரை… ஒரு ஆற்றல்மிக்க தலைவரை நீங்கள் மேடை ஏறி வந்து என்ன செய்வீர்கள் ? இப்படி எல்லாம் பேசுவது தவறு. நீங்கள் மேடை ஏறி வந்தால் நாங்கள் என சும்மா இருப்போமா என்று, எங்களுடைய மாநில துணைத்தலைவர் முன்னாள் ராஜசபை உறுப்பினர் சசிகலா புஷ்பா அவர்கள் கேள்வி கேட்டிருக்கிறார்கள்.