பஞ்சாப் பிரித்கார்டு நகரில் உள்ள மருத்துவமனையில் தனி வார்டில் சிகிச்சை பெற்றவர் ஓடியதால் மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சீனாவை உலுக்கிய கொரானோ பாதிப்பு இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. கேரளாவில் உள்ள 3 மாணவர்களுக்கு கொரானோ வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏனைய மாநிலங்கள் கொரானோ வைரஸ் தாக்கத்தில் இருந்து விடுபட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மாநிலம் முழுவதும் சுகாதாரத்துறை கூடுதல் கவனமுடன் இருந்து வருகின்றது.
இந்நிலையில் பஞ்சாப் அரசு மருத்துவமனையில் கொரானோ அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வந்தவர் ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. பஞ்சாப் மாநிலத்தின் பிரித்கார்ட் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் 38 வயது மதிக்கத்தக்க ஒருவருக்கு கொரானோ பாதிப்பு அறிகுறிகள் உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவமனையில் உள்ள தனி வார்டில் சிகிச்சை பெற்று வந்த அவரை தனி கவனம் செலுத்தி மருத்துவ உதவி செய்து வந்தனர். யாரும் தன்னை கண்காணிக்கின்றார்களா ? என்று அறிந்த அவர் அடுத்த நொடியே ஓடிச் சென்றதால்மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.