Categories
தேசிய செய்திகள்

என்ன தகுதி இருக்கு உங்களுக்கு ? முதல்வரை கடுமையாக விமர்சித்த நடிகை ..!!

மகாராஷ்டிர மாநில கட்சியின் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவையும், அவர் தலைமையிலான அரசையும் கடுமையாக விமர்சித்து வருகிறார் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத். முன்னதாக இவர் மும்பை காஷ்மீர் போல் உள்ளது என்று கூறினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆளும் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தன. இதனால் கோபமடைந்த உத்தவ் தாக்கரே கங்கனாவின் சொந்த மாநிலமான இமாச்சலப் பிரதேசம் குறித்து விமர்சனம் செய்தார்.

இதற்கு தற்போது எதிர்வினை ஆற்றியுள்ள கங்கனா ரனாவத், தகுதி இல்லாமல் வாரிசு அடிப்படையில் பதவிக்கு வந்தோரில் மோசமானவர் உத்தவ் தாக்கரே என்று குறிப்பிட்டுள்ளார். பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தை அடுத்து இவர்களுக்குள் மோதல் மூண்டது. அடுத்தடுத்து நடிகையும் நடிகை மாநில முதல்வருடன் மோதிக்கொள்வது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |