Categories
தேசிய செய்திகள்

’இஸ்லாமியர்கள் எந்த ஆவணங்களைச் சமர்ப்பித்தால் இந்தியர்கள் என ஏற்றுக்கொள்வீர்கள்?’

இஸ்லாமியர்கள், பழங்குடியினர் உள்ளிட்ட சிறும்பான்மையினர் எந்த ஆவணங்களைச் சமர்ப்பித்தால் அவர்களை நீங்கள் இந்தியர்கள் என ஏற்றுக்கொள்வீர்கள் என்று சீத்தாராம் யெச்சூரி மத்திய அரசிடம் கேள்வியெழுப்பியுள்ளார்.

இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஹைதராபாத்திலுள்ள ஓஸ்மானியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ‘சேவ் இந்தியா – சேவ் கான்ஸ்டியூசன்’ (save india – save constitution) நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கலந்துகொண்டார். அப்போது உரையாற்றிய அவர், “தேசிய குடியுரிமை பதிவேட்டால் அசாமில் 19 லட்சம் மக்கள் தங்களது குடியுரிமையை இழந்துள்ளனர். தேசிய குடியுரிமை பதிவேடு அரசியல் சாசனத்திற்கு முற்றிலும் எதிரானது.

இஸ்லாமியர்கள், பழங்குடியினர் உள்ளிட்ட சிறுபான்மையினர் எந்த ஆவணங்களைக் காட்டினால் அவர்களை இந்தியர்கள் என ஏற்றுக்கொள்வீர்கள்?. தேசிய குடியுரிமை பதிவேட்டை ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் செயல்படுத்துவதை தவிர்க்க வேண்டும். பாஜக மதசார்பற்ற இந்தியாவை இந்து நாடாக மாற்ற முயற்சி செய்வதை கைவிட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |