Categories
அரசியல் மாநில செய்திகள்

என்ன செய்யுறது ? நடுங்க தொடங்கிய திமுக…. அதிமுகவை மிஞ்சிய பாஜக …!!

பிரபல ஊடகவியலாளர் மதன் ரவிச்சந்திரன் பாஜகவில் இணைந்துள்ளதால் திமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் ஏராளமான ஊடகவியலாளர்கள் தங்களின் அறிவார்ந்த கேள்விகளால் தமிழக அரசியல்வாதிகளை நடுங்க வைக்கின்றனர். அந்த வரிசையில் மிக பிரபலமான ஊடகவியலாளர் தான் மதன் ரவிச்சந்திரன். தொலைக்காட்சிகளில் தனது ஆக்கபூர்வமான மக்களுக்கான கேள்விகளை எடுத்து வைத்து அரசியல் கட்சிகளை திணறடித்த மதன் ரவிச்சந்திரன், தொலைக்காட்சியை விட்டு வெளியேறி யூடியூப் சேனல் மூலம் தனது பணியை முன்னெடுத்தார்.

குறிப்பாக திமுக ஆட்சியில் அவர்கள் செய்தது என்ன ? என்று பல கேள்விகளை எடுத்துரைத்து இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஊடகவியலாளர் என்று பெயர் வாங்கினார். இவர் எந்த அரசியல் சார்பும் இல்லாமல் நேர்மையான கேள்விகளைத் தொடர்ந்து முன்வைத்து வந்தார். குறிப்பாக தமிழக அரசியலைப் பொறுத்தவரை திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார்.

Madan Ravichandran (@MadanRavichand4) | Twitter

தமிழகத்தை ஆட்சி செய்த காலத்தில் திமுக செய்தது என்ன என்று ஏராளமான கேள்விகளை எழுப்பி திராவிட அரசியலை நடுங்கச் செய்த மதன் ரவிச்சந்திரன் தற்போது பாஜகவில் ஐக்கியம் ஆகியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு பாஜகவில் இணைந்த போது தமிழகத்தில் இருந்து மதன் ரவிச்சந்திரனும் பாஜகவில் இணைந்து,  அதற்கான அடையாள அட்டையை பெற்றுக் கொண்டார்.

தமிழக அரசியலில் இனிமேல் பிஜேபி முகமாக மதன் ரவிச்சந்திரன் செயல்பட இருக்கின்றார். பொதுவான ஊடகவியலாளராக இருக்கும்போதே இவர் கேட்கும் துணிச்சலாக ஒவ்வொரு கேள்விகளும் திமுகவை துளைக்கும் வகையில் இருக்கும். தற்போது பாஜக முகமாக கேள்விகளை முன்வைக்க இருப்பதால் திமுக என்ன செய்யப்போகின்றது ? என்றெல்லாம் மதன் ரவிச்சந்திரனின் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் எழுதி வருகின்றனர்.

சமீபத்தில் கூட திமுக வை விமர்சனம் செய்ததாக பல விளைவுகளை தான் சந்தித்ததாக மதன் ரவிச்சந்திரன் குறிப்பிட்டிருந்தார். தற்போது பிஜேபி மதன் ரவிச்சந்திரனாக இருப்பதால் மீண்டும்  அவர் வீடியோ வெளியிடுவார் என்றும், திமுக விமர்சிப்பார் என்றும்,  பாஜக அரசியல் நிலைப்பாடு எடுத்துள்ளதால் திமுகவிற்கு பயமில்லாமல் தைரியமாக மக்களுக்கான கேள்விகளை முன்வைப்பார் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

பொதுவாக தமிழக அரசியலில் அதிமுக – திமுக என இரண்டு கட்சிகளும் பிரதானமாக இருந்தாலும்,  கடந்த சில நாட்களாக பாஜக முக்கியமான கட்சியாக வளர்ந்து கொண்டிருக்கின்றது. இப்போது மதன் ரவிச்சந்திரன் பாஜகவில் இணைந்துள்ளதால் திமுக அதிமுகவுக்கு பயப்படுகின்றதோ… இல்லையோ மதன் ரவிச்சந்திரனின் கேள்விகளுக்கு திமுக பயப்படும் என்பது உறுதியாகி உள்ளது. இது மதன் ரவிச்சந்திரன் ஆதரவாளர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் கொடுத்துள்ளது. திமுக ஆதரவாளர்களுக்கு மிகப்பெரிய நடுக்கத்தை கொடுத்துள்ளது.

Categories

Tech |