Categories
Uncategorized

“POSITIVE” வாழ்க்கைக்கு எது தேவை…? மனிதர்களுக்கு உணர்த்திய கொரோனா….!!

நம் வாழ்க்கைக்கு எது தேவை என்பதை கொரோனா உணர்த்தி சென்றுள்ளது அது என்னவென்பதை இந்த  செய்திதொகுப்பில்காண்போம்.

கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும்  144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவால் நாடு முழுவதும் மக்கள் தங்களது வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கின்றனர். இப்போது அத்தியாவசியப் பொருட்கள் விற்கும் கடைகளை தவிர மற்ற கடைகள் மூடப்பட்டிருக்கின்றன. சற்று யோசிப்போம்,

நாம் நம் வாழ்க்கையில் சம்பாதித்த பணத்தை எதில் எல்லாம் செலவிட்டு இருப்போம். செல்போன் வாங்க செலவழித்திருப்போம் தற்போது செல்போன் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. ஒருவேளை நமது கையில் தற்போது செல்போன் இல்லை என்றாலும் நம்மால் உயிர் வாழ முடியும். மால், தியேட்டர் என சுற்றித்திரிந்து பணத்தை செலவழித்து இருப்போம். அனைத்தும் தற்போது மூடப்பட்டுள்ளன.

நகை கடைக்கு சென்று நகை வாங்க செலவு செய்திருப்போம் அங்கும் கூட்டமில்லை மூடப்பட்டிருக்கிறது. கார் இருசக்கர வாகனங்கள் டிவி வாஷிங் மெஷின் அனைத்து பொருட்களையும் விற்கும் ஷோரூம் தற்போது மூடப்பட்டு உள்ளது. ஆகையால் இவைகள் ஏதும் இல்லாமல் நம்மால் வாழ முடியும். நாம் எதையெல்லாம் சந்தோஷம் வாழ்க்கைக்கு தேவை என்று நினைத்துக் கொண்டிருந்தோம் அத்தனையும் மூடப்பட்டிருக்கிறது.

மக்கள் அதிகளவில் கூடும் இடமாக காய்கறி கடைகள் மருந்து கடைகள் தான் இருக்கிறது. ஆக உயிர் வாழ உணவும், மருத்துவமும் தான் தேவை. மேற்கண்ட யாவையும் கூடவே கூடாது என்று கூறவில்லை. நம்மில் பலர் ஆடம்பர வாழ்க்கை என்று பகுமானம் காட்டிக் கொள்வதற்காக கஷ்டப்பட்டு உழைக்கும் பணத்தை இப்படி செலவு செய்து ஆரோக்கியமான உணவு உண்ண கூட தவிர்த்து விடுகிறோம்.

பணம் இருப்பவர்கள் செலவு செய்வார்கள், ஆனால் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் நம்மில் பலர் ஆடம்பர வாழ்க்கைக்கு செலவிடுவதை விட அத்தியாவசியமான ஆரோக்கியமான உணவுகளில் வாங்கி உண்பதில் எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யலாம் தவறில்லை. 21 நாள்கள் இருக்கிறது. நம்முடைய குழந்தைகளுக்கு குடும்ப நபர்களுக்கு எது முக்கியம் ? எது அத்தியாவசியம் ? என்பதை கூறி புரிய வைப்போம். புதியதொரு பாரதம் படைப்போம்.

Categories

Tech |