Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவுகள் என்ன ?

கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவுகள் குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிக்கு :

காலை 7 மணிக்கு: காபியுடன் பிஸ்கட்டு

8.30 மணிக்கு :  இட்லி சாம்பாரும் வழங்கப்படுகிறது.

காலை 10 மணிக்கு: கபசுரக் குடிநீர்

11 மணிக்கு: வேகவைத்த சுண்டல், வேர்க்கடலை மற்றும் உப்பு அல்லது சர்க்கரை கலந்த எலுமிச்சை சாறு கொடுக்கப்படுகிறது.

மதியம் 1 மணிக்கு:

சாதம், சாம்பார், ரசம், முட்டை, பொரியல், தயிர் சாதம் கொடுக்கப்படுகின்றது.

மாலை 4 மணிக்கு: காபி பிஸ்கட்

இரவு 7 முப்பது மணிக்கு: வாழைப்பழம்

இரவு 8 மணிக்கு: சாதம், சாம்பார், ரசம், பொரியல் அளிக்கப்படுகிறது.

இரவு 10 மணிக்கு: சிறிதளவு அளவு பூண்டுடன் பால் கொடுக்கப்படுகிறது.

இதேபோல கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டு ரமலான் நோன்பு இருக்கும் நோயாளிகளுக்கு

அதிகாலை 4 மணிக்கு: ரொட்டி, பிஸ்கட்

4.30 மணிக்கு: கபசுரக் குடிநீர் வழங்கப்படுகிறது.

இரவு 7 மணிக்கு: பால், வாழைப்பழம்

9.30 மணிக்கு: சாதம், சாம்பார், ரசம், பொரியல், முட்டை

10 மணிக்கு: சிறிதளவு பூண்டுடன் – பால் கொடுக்கப்படுகிறது.

Categories

Tech |