Categories
ஆன்மிகம்

கர்ப்பிணி பெண்களுக்கு ஏன் வளைகாப்பு நடத்துகிறார்கள்….? அதன் முக்கியத்துவம் குறித்து பார்ப்போமா….!!!

நம் முன்னோர்கள் கடைபிடித்த பெரும்பாலான சடங்குகளின் பின்னணியில் அறிவியல் காரணிகளும் உண்டு. அந்தவகையில் சடங்குகளில் ஒன்றாக கர்ப்பிணி பெண்களுக்கு 7அல்லது 9 வது மாதங்களில் நடத்தப்படும் வளைகாப்பு சடங்கின் முக்கியத்துவம் பற்றி பார்ப்போம்.

வளைகாப்பு எதனால் செய்ய வேண்டும் :

கணவன் தரப்பும், தாய்வீடு மற்றும் உறவினர்கள் முன்னிலையில் நடத்தப்படும் போது நம்மை சுற்றிய இவ்வளவு உறவுகள் உள்ளது என்ற நம்பிக்கையில், பிரசவம் பற்றிய அச்சம் தொடர்பான மனஅழுத்தம் நீங்குவதோடு தைரியத்தையும், தன்னம்பிக்கையை அளிக்கும். வளைகாப்பின்போது ஊட்டசத்தான தானியங்களை கொண்டு செய்யப்படும் உணவுகளை தயாரித்து கொடுப்பதால் கர்ப்பிணி பெண்ணுக்கும், வயிற்றில் வளரும் குழந்தைக்கும் உடற்சக்தி அதிகரிக்க கூடியதாகவும் இருக்கும்.

வர்மக்கலை கூற்றுபடி பெண்களின் இரண்டு கைகளின் அணிவிக்கப்படும் வளையல்களால் வயிறு மற்றும் கருப்பையை இயக்கும் வர்ம புள்ளிகள் தூண்டபட்டு கர்ப்பிணி பெண்ணுக்கும், கருவில் வளரும் குழந்தைக்கும் உடல்நலத்தை மேம்படுத்துகிறது. வளையல் ஓசையை குழுந்தை தொடர்ந்து கேட்கும்போது குழந்தையின் மூளை வளர்ச்சி தூண்டப்படுகிறது என்பது அறிவியல் உண்மை.

வளைகாப்பு எப்படி செய்ய வேண்டும் :

கர்ப்பிணி பெண்கள் புதிய புடவை உடுத்தி நன்கு அலங்கரித்து வளைகாப்பு சடங்கு நடத்தும் இடத்தில் பெண்ணின் கணவரோடு உட்காரவைக்க வேண்டும். வாசனைமிக்க பூக்கள், பழங்கள், இனிப்புகள், மஞ்சள், குங்குமம், கண்ணாடி , வளையல் சீர்வரிசை போன்றவை வைக்கப்பட்டு, ஏதாவது ஒரு இனிப்பு, சாம்பார் சாதம், தேங்காய் சாதம் போன்ற பல வகை சாப்பாடுகளை சமைத்து வைக்கப்பட்ட பின்னர் வளைகாப்பு நடத்தப்படும் பெண்ணின் தாய்மாமன் அனைத்து கண்திருஷ்டி கழிய தேங்காயை உடைக்க வேண்டும்.

பின்னர் கணவர் கர்ப்பிணி பெண்ணுக்கு மாலை அணிவித்து, இரு கைகளிலும், கன்னங்களிலும் சந்தனத்தை வைத்து நலுங்கு பூச வேண்டும்.  இரு கைகளிலும் வளையல் அணிவித்து, பன்னீர் தெளித்து தனது மனைவியையும், கருவிலிருக்கும் குழந்தையையும் வாழ்த்த வேண்டும். தொடர்ச்சியாக அனைத்து உறவினர்களும் ஒருவர் பின் ஒருவராக வளைகாப்பு பாடல்களை பாடியபடி சந்தனம் நலுங்கு வைத்து ஆசிர்வாதம் செய்ய வேண்டும். இறுதியில் சுமங்கலி பெண்கள் வளைகாப்பு முடிந்த பெண்ணுக்கு திருஷ்டி கழித்து போட வேண்டும்.

இதன் பின்னர் உறவினர்கள் வளைகாப்பு நடந்த பெண்ணிற்கு பல்வேறு பரிசுகளை கொடுத்து பெண்ணை ஆசிர்வதிப்பதால் அப்பெண்ணிற்கு மனமகிழ்ச்சி ஏற்படுத்தி தாய்க்கும் கருவில் வளருகின்ற சேய்க்கும் பல நன்மைகளை ஏற்படுத்துகிறது. கர்ப்பிணி பெண்களுக்கு நடத்தப்படும் இந்த வளைகாப்பு சம்பராதயம் உலகில் வாழும் அனைத்து தமிழர்களின் வீடுகளிலும் கர்ப்பிணி பெண்களுக்கு இன்றளவும் நடத்தப்பட்டு வருகிறது என்பதே உண்மை.

Categories

Tech |