காலை முதல் 5மணி நேரத்துக்கும் அதிகமாக நடந்த அதிமுக செயற்குழு கூட்டம் நிறைவடைந்துள்ளது.
5 மணி நேரத்துக்கு மேல் நடைபெற்ற அதிமுக செயற்குழுக் கூட்டம் தற்போது நிறைவடைந்திருக்கிறது. செயற்குழுவில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து காரசார விவாதம் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் சில நிர்வாகிகள் வலியுறுத்தி இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 5 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற கூட்டத்தில் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவுக்கு ஓ.பி.எஸ் தரப்பினர் வலியுறுத்தி இருக்கிறார்கள்.
அதேபோல சில அமைச்சர்கள் முதலமைச்சர் வேட்பாளர் யார் ? என்பதை இன்றைய தினமே அறிவிக்க வேண்டும் அல்லது பொதுவான தேதி அறிவித்து அதை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இது தொடர்பாக இன்றைய ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. ஒவ்வொருத்தரும் அவர்களது கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.
இந்த செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற ஒரு தரப்பினர் முதலமைச்சர் வேட்பாளரை உடனடியாக அறிவித்து செயல்படுத்த வேண்டும் என்றும், மற்றொரு தரப்பினர், ஓபிஎஸ் தரப்பினர் 11 பேர் கொண்ட வழிகாட்டு குழுவை உடனடியாக அமைக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். முதல் அமைச்சர் தரப்பில் இருந்து பதினோரு பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு இல்லாமல் கட்சியை வழி நடத்துவதற்கான குழு அமைக்கப் படலாம் என்று சொல்லி உள்ளார்கள்.