Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

என்ன நடந்துருக்கும்… மர்மமான முறையில் உயிரிழந்த பெண்… பரபரப்பை ஏற்படுத்தும் சம்பவம்…!!

நாமக்கல் மாவட்டத்தில் வீட்டில் தனியாக வசித்து வந்த பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் நடராஜபுரம் பகுதியில் ஜானகி(50) என்பவர் அவரது மகனுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜானகியின் 25 ஆண்டுகளுக்கு முன் கணவருடன் ஏற்பட்ட தகராறில் அவரை பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். இதனையடுத்து அவர்களது மகன் ராமச்சந்திரன் சென்னையில் டைல்ஸ் கடை ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இதனைத்தொடர்ந்து ஜானகி தையல் தொழில் செய்து வந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளார். இதனால் ஜானகியின் உடல்நலம் பதிப்படைந்திருந்த நிலையில்  வீட்டில் வேலை பார்ப்பதற்கு ஒரு பெண்ணை உதவியாக வைத்திருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் ராமச்சந்திரன் ஜானகியை செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முயன்றுள்ளார். ஆனால் வெகு நேரம் ஆகியும் அவரது தாயார் போனை எடுக்காததால் சந்தேகமடைந்த ராமச்சந்திரன் உறவினர் ஒருவரை வீட்டிற்கு சென்று பார்க்கும்படி கூறியுள்ளார். இதனையடுத்து பாண்டியன் என்பவர் ஜானகியின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது அவர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாண்டியன் உடனடியாக நாமக்கல் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

தகவலறிந்த மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி சரோஜ்குமார் தாக்கூர், துணை சூப்பிரண்டு அதிகாரி சுரேஷ், இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜானகியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் அவரது வீட்டை சோதனை செய்ததில் ஜானகி அணிந்திருந்த கம்மல் மற்றும் வீட்டில் உள்ள சில விலையுயர்ந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்துள்ளது.

இதனை பார்த்த காவல்துறையினர் கொள்ளையர்கள் வீட்டிற்கு வந்து கொலை செய்திருக்கக்கூடும் என தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு இடையில் ஜானகி வீட்டில் வேலை பார்த்து வந்த பெண்ணும் திடீரென மாயமாகி உள்ளார். அதனால் அவருக்கும் இந்த கொலையில் தொடர்பு இருக்கலாம் என காவல்துறையினர் அந்த பெண்ணை தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |