Categories
அரசியல் மாநில செய்திகள்

“6 ஆண்டுகளில் தமிழகத்திற்கு பாஜக செய்தது என்ன?” – அமித்ஷாவுக்கு டி.ஆர்.பாலு கேள்வி

சென்னைக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டு வந்தது திமுக தான் என கூறியுள்ள டி.ஆர்.பாலு, காவிரி நடுவர் மன்றம், விவசாயிகளின் 72 ஆயிரம் கோடி கடனை தள்ளுபடி செய்தது ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் திமுக அங்கம் வகித்த காலத்தில் தான் என தெரிவித்துள்ளார். ஆனால், மத்திய பா.ஜ.க. அரசு – அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து தமிழ்நாட்டிற்குச் செய்தது என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ள அவர்,

ஹைட்ரோ கார்பன் திட்டம், இந்தித் திணிப்பு, ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட துரோகங்களையே செய்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும், ஜி.எஸ்.டி. மூலம் இதுவரை தமிழகத்தில் இருந்து கிடைத்த நிதி எவ்வளவு? என்றும், அதில் தமிழ்நாட்டிற்கு செலவிட்டது எத்தனை கோடி? எனவும் டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பியுள்ளார்.

Categories

Tech |