உலகளவில் வைரலாகி வரும் 2 புகைப்படங்கள் குறித்து இந்த செய்திக்குறிப்பில் காண்போம்.
தற்போது உலக அளவில் 2 புகைப்படங்கள் வைரலாகி வருகின்றனர். ஒன்று அமெரிக்க கொடியுடன் அந்நாட்டு ராணுவத்தினர் குரூப்பாக சேர்ந்து எடுத்த புகைப்படம். மற்றொன்று, கியூபா நாட்டின் கொடியுடன் அந்நாட்டு மருத்துவர்கள் மற்ற நாடுகளுக்கு உதவி செய்ய பேரணி செல்வதுபோல் எடுக்கப்பட்ட புகைப்படம். இந்த இரண்டு புகைப்படத்தை பொதுவான ஒரு தலைப்பாக எது வீரம் என்று கொடுக்கபட்டு அதற்கான விடையும் விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா அதீத ஆயுத பலத்தாலும்,
ராணுவ படையை கொண்டும் உலக நாடுகளை அச்சுறுத்தி வந்தது. மற்றொருபுறம் கண்ணுக்குத் தெரியாத எதிரியைக் கண்டு உலக நாடுகளே அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில், அதை எதிர்க்கத் துணிந்து நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறது கியூபா. இதில்,
எது வீரம் என்பதை பகுத்தறிவு சிந்தனையால் ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள் உயிர்வாழத் தேவையானது ஆயுதங்கள் இல்லை. மருத்துவம், விவசாயம் மட்டுமே என்று, தற்போதைக்கு அமைதியாக வீட்டிற்குள்ளேயே இருப்போம் நமது குழந்தைகளுக்கு மருத்துவம் குறித்தும் வாழ்க்கை என்றால் என்னவென்பதை குறித்தும் இந்த 21 நாள்களில் புரிய வைப்போம். புதியதோர் பாரதம் படைப்போம்.