Categories
அரசியல் மாநில செய்திகள்

அட ஜெயலலிதா இல்லன்னா என்ன…. எம்ஜிஆர் இருக்காரே…. சசியின் மாஸ் எண்ட்ரி…!!

இன்று அதிகாலை சென்னை வந்த சசிகலா எம்ஜிஆர் சமாதிக்கு சென்று வணங்கி மரியாதையை செலுத்தியுள்ளார்.

சொத்து குவிப்பு வழக்கில் சிறைவாசம் அனுபவித்து வந்த சசிகலா கடந்த 27ஆம் தேதி விடுதலையானார். இதையடுத்து பகொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த அவர், பூரண குணமடைந்து பெங்களூரில் தங்கி இருந்தார். இதையடுத்து நேற்று பெங்களூரில் இருந்து சென்னைக்கு புறப்பட்டார். இதையடுத்து வழி நெடுகிலும் அவருடைய தொண்டர்கள் சிறப்பாக வரவேற்பளித்தனர். மேலும் தமிழக எல்லைக்குள் சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்த கூடாது என்று போலீசார் நோட்டிஸ் அளித்தனர். இதையடுத்து அதிமுக உறுப்பினர் ஒருவரின் காரில் ஏறி அனைவருக்கும் டுவிஸ்ட் கொடுத்தார்.

மேலும் தாம் வரும் வழியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என்றும் அடக்குமுறைக்கு அடிபணிய மாட்டேன் என்றும் அதிரடியாக பேசினார். இது அதிமுகவினர் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை சென்னை வந்து சேர்ந்த அவர் நேரடியாக ஜெயலலிதா நினைவிடத்திற்கு செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், பராமரிப்பு பணிகளை காரணம் காட்டி தமிழக அரசு அடுத்த சில நாட்களுக்கு மூடியுள்ளது. இதனால் எம்ஜிஆர் இல்லத்திற்கு சென்று மரியாதை செலுத்தியுள்ளார். மேலும் அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |