ஓபிஎஸ் சுற்றுப்பயணம் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்விக்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ,
சரி… எங்கள் கட்சியை பற்றி தான் கேட்க வேண்டுமா ? நாட்டில் மின்சார கட்டணம் உயர்ந்துள்ளது. ஓபிஎஸ் செல்கிறார் என்றால் என்னிடம் தான் கேட்க வேண்டுமா ? அவரிடம் போய் கேளுங்க. சும்மா தேவையில்லாமே இதை பேசாதீங்க. ஊடகப் பெருமக்கள் இதையும் போட்டு விடுவீர்கள்…
அவர் கோபப்பட்டார் என்று, எங்கள் கட்சியை பற்றி கேட்பதற்கு எங்களிடம் தானா கேட்க வேண்டும், நீங்கள் கேட்டு விட்டீர்கள்… முதலமைச்சர் என்ன சொன்னார் என்று ? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று ? என்னிடம் கேள்வி கென்டர்கள் நான் முதலமைச்சர் பற்றி சொல்லிடோன்.
சும்மா திரும்ப திரும்ப அதே கேட்டிங்க. அப்புறமும் நான் பதில் சொல்லிட்டேன். எங்கள் கட்சிக்கு என்ன நல்லதோ, அதை செய்வதற்கு எடப்பாடியார் இருக்கிறார் என்று சொல்லிவிட்டேன், திரும்ப அவர் போகிறார், இவர் போறாரு, இதையே கேட்பதற்கு தான் நீங்கள் வந்திருக்கிறீர்களா?
பேட்டி எடுப்பதற்கு முன்பு தனியா வந்து அண்ணா திமுககாரர்களை பார்த்து உங்கள் கட்சியைப் பற்றிதான் கேட்கப் போகிறோம் என்று சொன்னால் நாங்கள் பேட்டியே கொடுக்கப்போவதில்லை. அதான் பேசுவதற்கு, பேட்டி கொடுப்பதற்கு, தலைவர்கள் இருக்கிறார்கள். உருவாக்கி கொடுத்திருக்கிறோம் என தெரிவித்தார்.