தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட திமுக MLA ஜெ.அன்பழகன் செய்தியாளர்களை சந்தித்தார்.
தமிழக சட்டசபை மரபுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் கூட்டத்தொடர் முழுவதும் நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து பேரவை வளாகத்தில் பேசிய அவர் , சட்டம் ஒழுங்கை பேணி காப்பதில் தமிழகம் முதல் இடம் என்று முதல்வர் சொல்லியிருகிறார்கள். ஏதில் ? முதலிடம் கொடுத்தார்கள்.
சட்ட ஒழுங்கு சரியில்லை என்றால் முதலிடம் கொடுத்துள்ளார்கள் என்கிறார். நெல்லை கண்ணனை கைது பண்ணீங்க சரி ,
எச் ராஜா பேசினார் குண்டு போடுவோம் என்றார் அவர் மீது நடவடிக்கை எடுத்தீங்களா ?
அது இல்லன்னா ஒரு நீதிமன்றம் என்றால் என்ன ? என்று பெரிய வார்த்தை சொன்னார் அதற்க்கு எதிராக நடவடிக்கை எடுத்தீர்களா ?
பெரியார் சிலை உடைப்போம் என்று சொன்னாரு அதுக்கு நடவடிக்கை எடுத்தீர்களா ? என்று அடுக்கினார்.
அதிமுக பேனர் விழுந்து ஒரு பொண்ணு இறந்து போச்சு அந்த அதிமுககாரனை பிடிக்கவில்லை. நீதிமன்றத்தில் திட்டுவாங்கி தான் கண்டுபிடிச்சீங்க.
உச்ச நீதிமன்றம் , உயர்நீதிமன்றத்தில் திட்டு வாங்குவதில் தான் முதலிடம். தினசரி திட்டுவாங்குறீங்க அதுல தான் நீங்க முதலிடம் என்று திமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் தெரிவித்தார்.