தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக இருக்கும் பூனம் பாஜ்வா கடந்த 15 வருடங்களுக்கு மேலாக திரையுலகில் இருக்கிறார். இவருக்கு தற்போது படங்களில் நடிக்க வாய்ப்பு குறைந்துவிட்டாலும் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் நடிகை பூனம் பாஜ்வா தன் வாழ்க்கையில் நடந்த ஒரு விஷயத்தைப் பற்றி கூறியுள்ளார். அதாவது 7-ம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவர் நடிகை பூனம் பாஜ்வா க்கு இன்ஸ்டாகிராமில் லவ் ப்ரபோஸ் செய்துள்ளார்.
அதில் எனக்கு தற்போது வயது குறைவாக இருக்கிறது. எனக்கு 21 வயது ஆகும் வரை நீங்கள் காத்திருங்கள். தற்போது வயது வித்தியாசம் என்பது ட்ரெண்டாகிவிட்டது. நான் என்னுடைய அம்மாவையும் சம்மதிக்க வைத்து விட்டேன். நீங்கள் தொடர்ந்து படங்களில் கவர்ச்சியாக நடிக்கலாம் என்று பதிவிட்டுள்ளார். மேலும் இந்த பதிவுக்கு என்ன சொல்வது என்று கூட தெரியாமல் அதற்கு ரிப்ளை செய்யாமல் விட்டுவிட்டதாக பூனம் பாஜ்வா கூறியுள்ளார்.