Categories
அரசியல் தேசிய செய்திகள்

அமித்ஷா எதுக்கு ? தேவை இல்லை -பாஜகவை கதறவிட்ட சிவசேனா …!!

மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க பாஜகவின் தயவு தேவை இல்லை என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர் மகாராஷ்டிராவில் சிவசேனா கண்டிப்பாக ஆட்சி அமைக்கும் என்றும் , ஆட்சியை கைப்பற்ற தங்களுக்கு அமித்ஷா  மற்றும் பட்னாவிஸ் அடைய தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Related image

தாங்கள் எப்போதும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருந்ததாகவும் , பாஜக பொய் உரைத்ததால் தாங்கள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும் தெரிவித்தார். மத்தியில் பாஜகவுக்கு ஆதரவு அளித்த சிவசேனா கடந்த முறை மஹாராஷ்டிராவில் பாஜகவுடன் கூட்டணி அமைந்து ஆட்சி செய்த நிலையில் தற்போது அமித்ஷா , பட்னாவிஸ்_க்கு எதிராக காட்டமாக பேசியது தேசிய அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |