Categories
அரசியல் மாநில செய்திகள்

கர்நாடக, குஜராத்தில் நடந்ததற்கு….. அண்ணாமலை என்ன சொல்ல போகிறார் ? துரை வைகோ ஆவேசம் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ, பெங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு சம்பவத்தை பொறுத்த வரைக்கும் 2020-ல ஒரு கலவரத்தில் அவர் ஈடுபட்டு இருக்காரு. ஒருத்தர இப்படி இரண்டு வருஷமா தொடர்ந்து இந்த மாதிரி செயல்களை ஈடுபட்டு இருக்கிறவரை  ஏன் கர்நாடகாவை ஆளுகின்ற பாஜக அரசு ஏதும் செய்யல. அண்ணாமலை கிட்ட நான் கேட்கிறேன். தமிழ்நாடு அரச பத்தி குற்றச்சாட்டு வச்சாரே, இதேதான் அங்க நடந்திருக்கு. அங்க ஆளுகின்ற பாஜக அரசு என்ன செஞ்சாங்க ?

இதில் குற்றம் சாட்டப்பட்டவர் ஒத்திகை பண்ணி இருக்காரு. ஒரு இடத்துல ஒத்திகை பண்ணி இருக்காரு. ஏற்கனவே பெங்களூருல ஒரு கலவரத்தில் ஈடுபட்டு இருக்காரு, எல்லாமே போலீஸ் ரெக்கார்டுல இருக்கு. என்ன பண்ணாங்க ? அப்போ தமிழ்நாட்டுக்கு ஒரு நியாயம்,  கர்நாடகத்துக்கு ஒரு நியாயமா ? அது தான் கேட்கிறேன் நான்…  அதே மாதிரி ஊழல்  பத்தி பேசுறாரு. குஜராத்தில் உங்களுக்கு என்ன நடந்ததுன்னு தெரியும் ?

அந்த தொங்கு பாலம் போகும்போது கிட்டத்தட்ட 141 பேர் இறந்தாங்க. 50க்கும் மேற்பட்ட குழந்தைகள். இதுவரைக்கும் ஒரு எஃப் ஐ ஆர் கூட பதிவு செய்யல. குஜராத் உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள். அங்கே இருக்கிற மாநகராட்சி,  அங்க இருக்குற பாஜக அரசு இருக்கும் மாநகராட்சியின் கவன குறைவில் இந்த விபத்து நடந்திருக்கு. இதுவரைக்கும் ஒரு எஃப் ஐ ஆர் கூட பதிவு பண்ணல, ஒன்னும் பண்ணல. அதே நேரத்தில் அந்த காண்ட்ராக்ட் எடுத்த ஒருத்தர் யாருன்னு பார்த்தீங்கன்னா ? கடிகாரம் பண்றவன்.

அஜந்தா கடிகாரம் செய்யும் நிறுவனம் தான் இந்த காண்ட்ராக்ட் எடுத்து எடுத்து இருக்காங்க. அங்க உச்சநீதிமன்றத்துக்கு ஒருத்தர் மனு போட்டு இருக்காரு. என்ன மனு போட்டிருக்கிறார் என்றால் ?  அந்த பாலம் விபத்துல,  அவருடைய அண்ணனும்,  அண்ணியும்,  அவஙகளுடைய குழந்தையும் இறந்திருக்காங்க. தலைமை தேர்தல் ஆணையராக இருக்கட்டும், இல்லாட்டி ஒரு மாநிலத்தினுடைய ஆளுநரா இருக்கட்டும், பொதுவான நபரா இருக்கணும்.

ஆனா ஒரு தனிப்பட்ட அரசியல் கட்சி,  அந்த அரசியல் கட்சியினுடைய சித்தாந்தங்களுக்கு ஏற்ப நடந்து கொள்வது தான் இப்ப பிரச்சனையே…  நீதிமன்றமே அவர்களுக்கு கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள். தொடர்ந்து அடிக்கடி இந்த மாதிரி மாறுதல் பண்றது, செய்யறது இதெல்லாம் கண்டனத்திற்குரியது எனநீதிமன்றமே  சொல்லி இருக்காங்க என விமர்சனம் செய்தார்.

Categories

Tech |