Categories
தேசிய செய்திகள்

என்ன செய்து கொரோனா பாதிப்பில் இருந்து மீள்கிறது கேரளா?

இந்தியாவில் கொரோனா பாதிப்பின் முதல் மாநிலம் கேரளாவாக  இருக்கும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். உலகமே அதிர்ந்து நடுங்கிக் கொண்டிருக்கும் கொரோனாவின் முதல் அடியை தான் வாங்கினாலும், கேரளா அதற்கு அஞ்ச இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அனைத்து மாநிலங்களும் கொரோனா பரவலை தடுக்க போராடி வரும் இந்தச் சூழ்நிலையில் கேரளா கொரோனா பாதிப்பில் இருந்து படிப்படியாக மீண்டு வந்து கொண்டிருக்கிறது. வல்லரசு நாடுகளே கொரோனாவை கையாள திக்குமுக்கு ஆடிக்கொண்டிருக்கும் போது, கேரளா மட்டும் கொரோனாவை எப்படி விரைவாக கையாண்டது? எப்படி அவர்களுக்கு இது சாத்தியமானது ? என்பதை விளக்குகிறது இந்த தொகுப்பு.

இந்தியாவில் முதல் கொரோனா பாதிப்பு : 

இந்தியாவில் முதன்முதலாக கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட மாநிலம் கேரளா. ஜனவரி 30ஆம் தேதி சீனாவில் இருந்து வந்த திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயது மருத்துவ கல்லூரி மாணவிக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து மாணவியுடன் வந்த 20 பேரும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதையடுத்து கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் ராணி பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சார்ந்த 5 பேர் பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து கேரளாவிற்கு சுற்றுலாவுக்கு வந்த இத்தாலி நாட்டினருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

மாவட்டத்திற்கு சீல் : 

கொரோனா தொற்றின் ஆபத்தை உணர்ந்த கேரளா கொரோனாவுக்கு எதிரான தனது போராட்டத்தைத் தொடங்கியது. முதல் கட்டமாக இத்தாலியில் இருந்து கேரள மாநிலத்துக்கு சுற்றுலா வந்தவர்களின் பட்டியலைத் தயார் செய்தது. இந்த பட்டியலில் 3,500 நபர்கள் இடம்பெற்றிருந்தனர். உடனடியாக காவல்துறையினரின் உதவியுடன் அவர்கள் அனைவரும் மருத்துவ கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டன, அத்தோடு நிற்கவில்லை விமான நிலையங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதித்ததுடன், பத்தினம்திட்டா மாவட்டத்திற்கு சீல் வைக்கப்பட்டது.

Coronavirus outbreak: Kerala moves fast soon after first case ...

சிகிச்சை வார்ட்கள் தயார் : 

மேலும் காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் உள்ள நபர்கள் அழைக்கப்பட்டு, அவர்கள் அனைவரும் மருத்துவ கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர். இவர்களுக்கென பிரத்தியேகமாக எர்ணாகுளம், கோட்டயம் மருத்துவக்கல்லூரிகளில் தனி வார்ட்களும் அமைக்கப்பட்டன. ஆபத்து அதிகமாகிக் கொண்டு இருப்பதை உணர்ந்த கேரள அரசு, உடனடியாக மாநிலத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களையும் மூடியது.எல்லைப் பகுதிகளில் கண்காணிப்ப்பை பலப்படுத்தி வாகனங்கள் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

20,000 ஆயிரம் கோடி ஒதுக்கீடு :

மக்களுக்கும் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, நோயின் தன்மை குறித்து ஆராய ஆலோசனைகளும் நடத்தப்பட்டன. இந்த முயற்சிகளின் இறுதிக்கட்டத்தில் மொத்தம் 32 ஆயிரம் நபர்கள் மருத்துவ கண்காணிப்பின் கீழ் வந்திருந்தனர். 237 நபர்களுக்கு கொரோனா தொற்றும் உறுதி செய்யப்பட்டிருந்தது. உடனடியாக கொரோனா நோய் தடுப்பிற்க்காக 20,000 கோடி ஒதுக்கி பணிகளை முடுக்கி விட்டது கேரள அரசு. இந்த நடவடிக்கை அனைத்து மாநிலங்களையும் ஆச்சரியப்பட வைத்தது. முதற்கட்டமாக மருத்துவர்கள் செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு விலை உயர்ந்த பாதுகாப்பு உபகரணங்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்தது.

உள்ளாட்சி அமைப்புகளில் கொரோனா ஒழிப்பு வார்ட் கமிட்டி : 

அத்துடன் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளும் திறக்கப்பட்டன. இவைதவிர மாநிலத்தின் அனைத்து ஊராட்சிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் கொரோனா தடுப்பு குழுவும் அமைக்கப்பட்டது.அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின் வார்டு பகுதிகளில் வார்டு உறுப்பினர்களின் தலைமையில் கொரோனா ஒழிப்பு வார்ட் கமிட்டிகள் உருவாக்கப்பட்டன. இந்த குழுக்கம் மூலம் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், உள்ளூர்வாசிகள் என அனைவரும் அடையாளம் காணப்பட்டன. அத்துடன் புதிதாக வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் அப்படியே அழைத்துச் செல்லப்பட்டு 20 நாட்கள் கட்டாய மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டனர்.

இலவச ரேஷன், உதவித்தொகை : 

ஆதரவற்றோர், பாதுகாப்பு இல்லாதவர்கள் ஆகியோரை கவனிக்க ஆளுங்கட்சியினர் தன்னார்வலர்களுடன் இணைந்து பணியாற்ற ஆரம்பித்தனர். இதன்மூலம் ஆதரவற்றோரின் பாதுகாப்பானது உறுதி செய்யப்பட்டது. அவர்களுக்கு பிரத்தியேகமாக கம்மியூனிட்டி கிச்சன்கள் துவங்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உணவுகள், அவர்கள் தங்கும் இடத்திற்கே கொண்டு செல்லப்பட்டன. இதுமட்டுமல்லாமல் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச ரேஷன். அத்தியாவசிய பொருட்களின் தொகுப்பு. உதவித்தொகைகள் வழங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. இந்த தொடர் நடவடிக்கைகள் மூலம் பிரதமர் அறிவிக்கும் முன்னரே கேரளாவில் ஊரடங்கு அமுலானது.

மக்கள் ஒத்துழைப்பு : 

அரசின் நடவடிக்கைகள் ஒருபுறம் சீராக நடைபெற்றாலும், இவை அனைத்தும் வெற்றி பெற்றதற்கான ஒரே காரணம் கேரள மக்களின் அளப்பரிய ஒத்துழைப்பு. அதற்கு முக்கிய காரணம் என்னவென்று ஊரடங்கு வழிமுறைகளும், கேரள மக்களின் வாழ்க்கை முறையும் பின்னிப்பிணைந்து அமைந்திருந்தது. பொதுவாக கேரள மக்களுக்கு ஊரடங்கு புதிய விஷயமில்லை, கேரள மாநிலத்தில் நள்ளிரவில் பந்த் அறிவிக்கப்பட்டாலும் அதற்கு முழு ஆதரவு கேரள மக்களிடம் இருக்கும். மாலை வேளைகளில் தோட்ட வேலையை பார்த்து முடிக்கும் அவர்கள் 8 மணிக்குள் இரவு உணவை உண்டுவிட்டு 9 மணிக்கெல்லாம் படுக்கைக்குச் சென்று விடுவர். அதற்கு மேல் பேருந்துகள் இயக்கமும் அவ்வளவாக இருக்காது.

கேரள மக்களின் பழக்க வழக்கம் : 

கேரள மக்களின் மற்றொரு வளக்கம் அவர்களுக்கு ஒரு வாரத்திற்குத் தேவையான காய்கறிகளை மொத்தமாக வாங்கிக் கொள்வது. இந்த நடைமுறையை கேரள மக்கள் நெடுங் காலமாக கடைப்பிடித்து வருகின்றனர். இதில் மற்றொரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் அத்தியாவசிய தேவைகளான தேங்காய், சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு, பூண்டு, புலி உள்ளிட்ட கெட்டுப்போகாத காய்கறிகளை ஒரு மாதத்திற்கு இருப்பு வைக்கும் வகையில் வாங்கிக்கொள்வர்.

ஒருவேளை காய்கறிகள் வாங்க முடியவில்லை என்றாலும், வீட்டு முற்றத்திலும், தோட்டத்தின் சிறிய பரப்பில் தவறாது பயிரிடப் பட்டிருக்கும் கீரை வகைகள், பச்சை மிளகாய், பீன்ஸ், வெண்டை, பாகற்காய், அவரை, சேனை, சேம்பு என எதையாவது பறித்து அடுத்த வாரம் வரை சமாளிக்கும் வசதிகளும் அவர்களிடம் இருக்கின்றது. முக்கியமாக பலாக்காய்யின் சுளையை பல்வேறு வகைகளை தயாரித்து ஒரு குடும்பத்தின் முழுநேர பசியைப்போக்கவும் அவர்கள் கற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

கேரள மக்களின் உடலமைப்பு : 

கேரளாவின் மற்றொரு சிறப்பம்சம் பெரும்பான்மையான வீடுகள் தனித்தே இருக்கின்றனர். மேலும் படித்தவர்கள் அதிகம் உள்ள பகுதி என்பதால் கொரோனா குறித்த நடவடிக்கைகள், விழிப்புணர்வுடன் பின்பற்றப்பட்டு வருகிறது. இதனால் சமூக இடைவெளி என்பது எளிமையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதேபோல கேரள மக்களின் உடலை பராமரிக்க்கும் குணமும் கொரோனவை எதிர்க்க பெரும் பங்கு வகித்துள்ளது. பொதுவாக கேரளர்கள் வெளியே வரும்போது அவர்களின் தோற்றத்தை வைத்து ஏழை, பணக்காரன் என்றெல்லாம் எடைபோட்டு விடமுடியாது. அந்த அளவிற்கு தினக்குளியல், மிடுக்கான ஆடை, உடலில் எண்ணெய் தேய்த்து பராமரித்தல், செருப்புகளை கூட தூய்மையாக வைத்தல் போன்றவற்றில் அதிக கவனம் செலுத்துவார்கள்.

கேரள மக்களின் உணவு முறை : 

கைகளை அடிக்கடி கழுவுதல் என்பது அவர்களது பழக்க வழக்கத்தின் மிக முக்கியமான ஓன்று. அதேபோல உணவு பாரம்பரியத்திலும் கேரளர்கள் வேறுபட்டுக் காணப்படுகின்றன. கேரளா என்றாலே கடின உணவு என்று எல்லாரும் சொல்லப்படுவது உண்டு. அந்த வகையில் காலையில் அப்பம், புரோட்டாவிற்கு கூட முட்டை இறைச்சி, மதியம் பொரியல், மீன், இறைச்சியோடு குத்தரிசி சாப்பாடு, மாலைக்கு ஏதாவது அவித்த கிழங்கு, இரும்புச்சத்து கொண்ட நேந்திரன் பழம், இரவு எளிமையாக செறிக்கும் கஞ்சியும், காய்கறிகளும் என அமைந்திருக்கும் அவர்களின் உணவுமுறையும் இயல்பாகவே அவர்களுக்கு உடல் ஆரோக்கியத்தையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் அளிப்பவையாக இருக்கின்றன.

This 'corona' in Kerala has become cynosure of all eyes

தன்னலமற்ற சேவை : 

கொரோனாவில் இருந்து கேரளா மீண்டு வருவதற்கு அரசின் நடவடிக்கையில் முக்கிய பங்கு வகிக்த்தாலும், மருத்துவத்துறையின் தன்னலமற்ற சேவை, பொதுமக்களின் ஒத்துழைப்பு, நோயின் தன்மை குறித்த சரியான புரிதல், பாரம்பரியத்தை பேணி பாதுகாத்தல் உள்ளிட்டவையே கடவுளின் தேசத்தை காப்பாற்றி வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

Categories

Tech |