Categories
அரசியல் மாநில செய்திகள்

டெத்ல என்ன டிஃபரண்ட் ? அங்க யாரும் போறது இல்லை… புட்டுபுட்டுனு அடுக்கிய எடப்பாடி …!!

கொரோனா இறப்பு விதத்தில் வேறுபாடு இருக்கின்றது ஏற்ற கேள்விக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார்.

சென்னையில் கொரோனா இறப்பில் வேறுபாடு வருகிறது என்ற கேள்விக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், டெத்ல என்ன டிஃபரண்ட். அரசாங்க மருத்துவமனைகளில் ஏற்படும் இறப்பு கணக்கு தெரியுது. தனியார் மருத்துமனையில் கிடைக்கின்ற செய்தியை வைத்து நாம் அறிவிக்கிறோம். இதுல இறப்பை மறைப்பதற்கு எதுவுமே கிடையாது, இறப்பை யாரும் மறைக்க முடியாது. கொரோனா இறப்பை எப்படி குறைத்து சொல்ல முடியும்.

இறந்தால் தான் யாருமே போறதில்லை. இறப்பை பத்திரிக்கையாளர்கள் நீங்கள் உடனே காட்டி விடுகின்றீர்கள். வேற எந்த மரணம் வந்தாலும் பிரச்சனையே கிடையாது. கொரோனா வைரஸ் தொற்று வந்து இறந்தார் என்றால் அத்தனை மக்களுக்கும் தெரிஞ்சு விடும். இதை மறக்கவே முடியாது, ஏனென்றால் யாருமே அங்க போவதில்லை.

இதை மறைத்து அரசுக்கு எந்த  நன்மையும் கிடையாது. இது வெளிப்படைத்தன்மை. நம்முடைய சுகாதாரத் துறையின் மூலமாக தின்தோறும் அறிகின்றோம். நாள்தோறும் எவ்வளவு பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு இருக்காங்க, எவ்வளவு பேர் குணமடைந்து இருக்காங்க, எவ்வளவு பேர் உயிரிழந்து இருக்காங்க, எவ்வளவு சிகிச்சையில் இருக்காங்க எல்லாமே தெளிவுபடுத்துறோம், இதுல ஒளிவு மறைவு இல்லாமல் வெளிப்படையாக தின்தோறும் அறிவித்து  வருகின்றோம்.

பரிசோதனை அதிகரிக்க வில்லை என்று சொல்கிறார்களே..! என்ற கேள்விக்கு எப்படி இல்லன்னு சொல்ல முடியும். நேற்றையதினம் கிட்டத்தட்ட 17 ஆயிரத்து 675 பரிசோதனை  செய்துள்ளதாக அறிக்கை கொடுத்துள்ளார்கள்.மொத்தமா மாதிரிகள் இது வரைக்கும் 6 லட்சத்து 9 ஆயிரத்து 856 பேர் பரிசோதனை செய்த மாநிலம் தமிழ்நாடு தான்.

இந்தியாவிலே நாம் தான் அதிகமான பரிசோதனை செய்துள்ளோம். மொத்த பாதிப்பு 36 ஆயிரத்து 841, பரிசோதனை நிலையங்கள் 77 இருக்கு. சிகிச்சை பெற்ற்று வருபவர்களின் எண்ணிக்கை 17179. நேற்றைய தினம் மட்டும் குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 1008 . இதுவரைக்கும் குணமடைந்து வீடு திரும்பியோரின் மொத்த எண்ணிக்கை 19 ஆயிரத்து 333 பேர் . கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 326 பேர்.

Categories

Tech |