Categories
அரசியல் மாநில செய்திகள்

எது நல்லது ? எது கெட்டதுன்னு ? எதுவுமே ஸ்டாலினுக்கு தெரியல – எடப்பாடி பழனிசாமி …!!

அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக சட்ட ஒழுங்கு சீர்குலைஞ்சு போச்சு. எப்ப பாத்தாலும் பாலியல் வன்கொடுமை நடந்து கொண்டிருக்கிறது. எல்லாமே உங்க செய்திகளை பார்க்குறதுனால சொல்றேன், உங்க ஊடகத்திலும், பத்திரிகைல வர செய்தியை பார்த்து தான் உங்கள் முன் பேட்டி கொண்டிருக்கின்றேன்.

இன்றைக்கு கூட பத்திரிகையில் ஒரு செய்தியை பார்த்தேன்.  ஒரு திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளான். திருமணத்துக்கு போகும்போது ஒரு பெண்மணி இடம் இருந்து செயினை பறித்துள்ளார். அவரை புடித்து ஒப்படைக்கும் போது, பொறியாளராக படித்தவர், சாதாரண ஆளு இல்லை.  படித்திருக்கிறார்கள், பொறியாளராக இருக்கிறார். வேலையில் இருந்தவர்.

ஆன்லைன் ரம்மி சூதாட்டத்திற்கு போயி கடன் வாங்கி செலவு செஞ்சுட்டாரு. கடனை அடைப்பதற்காக  திருடி இருக்கிறார். அப்படிப்பட்ட ஒரு கீழ்த்தனமான நிலைக்கு இன்னைக்கு மாணவர்களும்,  இளைஞர்களும் தள்ளப்பட்டு விட்டார்கள் என நான் பலமுறை சட்டமன்றத்தில் பேசியாச்சு, ஊடகத்தில் பேசியாச்சு.

இதை முதலமைச்சர் ஸ்டாலினிடம் கேட்டா… இதுக்கு கருத்து கேட்பு கூட்டம் நடத்துறாரு. சூதாட்டத்திற்கு யாராவது கருத்து கேட்பு கூட்டத்தை நடத்துவாங்களா? உலகத்திலேயே எங்கேயும் கிடையாது. ஆக இந்த முதலமைச்சர் எது நல்லது ? எது கெட்டதுன்னு ? எதுவுமே தெரியாத ஒரு முதலமைச்சர் தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருக்கின்றார் என விமர்சித்தார்.

Categories

Tech |