Categories
அரசியல் மாநில செய்திகள்

என்ன நடக்கிறது திமுக கூட்டணியில் ? விடாமல் விமர்சித்த VCK…. பதில் சொன்ன ஸ்டாலின்…!!

2019 நாடாளுமன்றத் தேர்தல்,  2021 சட்டமன்ற தேர்தல்,  உள்ளாட்சி தேர்தல்கள்  என நான்கு வருடமாக சில மன வருத்தங்கள் இருந்தாலும்,  எந்தவித சலசலப்பும்  இல்லாமல் தொடர்ந்து வந்தது. திமுக கூட்டணி.

ஆனால் சமீப காலங்களில் அந்த காட்சிகள் மாற ஆரம்பிச்சிருக்கும் என்கிற மாதிரியான விஷயங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றது.

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் அமைச்சர் அன்பில் மகேஷை நேரடியாக விமர்சித்த விசிக,  சோனி காந்தி மீதான விசாரணை கண்டித்து
காங்கிரஸ் நடத்திய ஆர்ப்பாட்டத்தில கலந்துக்கிட்டவங்க கைது என கூட்டணியில்  சலசலப்புல அதிகரிச்சிருக்கு.

திமுக கூட்டணியில் ஏற்பட்டிருக்கிற இந்த சலசலப்பு எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் ? இந்த சலசலப்புகளுக்கு திமுக தலைமையின் உடைய ரியாக்ஷன் என்ன ?

விசிக தோழமை சுட்டியதா விமர்சித்ததா ? கள்ளக்குறிச்சி விவகாரத்துல பள்ளி கல்வித்துறை அமைச்சரின் செயல்பாடுகள் மீது தொடர்ந்து விடுதலை சிறுத்தை கட்சி துணை பொது செயலாளர் வன்னியரசு விமர்சனங்களை முன்வைத்துக் கொண்டிருக்கிறார். பள்ளி குழந்தைகளுடைய மரணங்கள் பெரும் சந்தேகங்களையும், துயரங்களையும் தந்திருக்கு.

அவர்களுக்கு நம்பிக்கை கொடுக்க வேண்டிய பொறுப்பு ஆசிரியருக்கு மட்டுமல்ல. அமைச்சர் அன்பில் மகேஷுக்கும் இருக்கு. ஆனா அதை விட்டுட்டு கள்ளக்குறிச்சி பள்ளியை திறக்குறதுலயே குறியாக இருக்கிறது ஏன் என்று கேள்வி எழுப்பி இருந்தார் ? அது மட்டும் அல்லாமல் மாணவி நல்லடக்கத்தில் ஆறுதல் சொல்ல கூட அமைச்சர் ஏன் கலந்து கொள்ள வில்லை ?  என்றும்,  இதுக்கு அமைச்சர் பதில் சொல்வாரா என்னும் கேட்டிருந்தார் வன்னியரசு.

திமுக மீது விசிக விமர்சனம் வைப்பது இது முதல் முறையும் அல்ல.  இணையதிலும் இரு கட்சித் தொண்டர்கள் விமர்சனங்களை வைத்திருக்கிறதும்,  விஷயங்களுக்கு ஏற்ப நடந்துகொண்டுதான் இருக்கு. இது தலைமை அளவில நடக்கவில்லை என்பது தான் கவனிக்க வேண்டிய விஷயமா இருக்கு. திமுக தலைவர் ஸ்டாலினே ஒரு முறை விடுதலை சிறுத்தை தலைவர் திருமாவளவன் பேச்சுக்கு நான் கட்டுப்பட்டவன் என்று பொதுக்கூட்ட மேடையிலே தெரிவித்து இருக்கிறார். இன்னொரு தருணத்தில திருமாவளவன்,  திமுக மீதான விமர்சனம் என்பது
தோழமை சுட்டுதலாக தான் பார்க்கப்படணும் என்று சொல்லி இருப்பார்.

திமுக காங்கிரஸ் உறவு எப்படி இருக்கு ?

நேஷனல் ஹெரால்டு வழக்குல சோனியா காந்தி கிட்ட அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதை  கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் சார்பா போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியினர காவல்துறை கைது செய்திருந்த செய்திகளை அதிகளவில பார்க்க முடிந்தது. திமுக கூட்டணியில் பெரிய கட்சியா இருக்கக்கூடிய காங்கிரஸ் நடத்துன போராட்டங்களை காவல்துறை தடுக்கின்ற   நிகழ்வுகள் திமுக – காங்கிரஸ் உறவுல சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறதா சொல்லப்படுகின்றது ?

சட்டமன்ற தேர்தலுக்கு முன்னாடியே திமுக சீனியர் தலைவர்கள் காங்கிரஸ்ஸை ”சுமை” என்று விமர்சித்தது, சமீபத்தில் காங்கிரஸ் – அதிமுக கூட்டணி உருவாக்கலாம் என செய்தி உருவாகி, அதை காங்கிரஸே மறுத்தது என அடிக்கடி இரு கட்சிகளுக்கான உரசல்கள் வெளிச்சத்துக்கு வருகிறது. ஆனால் ஒவ்வொரு முறையும் ராகுல் காந்தியும், திமுக தலைவர் ஸ்டாலினும் தேசிய அளவில் முக்கியமான முடிவுகள் எடுக்கும் போது இரு கட்சியும் இணக்கமான முடிவையே எட்டுவதும்,  ஜனநாயகத்தை காப்பாத்த காங்கிரஸ் கூட்டணி அவசியம்னு  டெல்லி திமுக அலுவலக திறப்பு விழாவில் ஸ்டாலின் பேசியதும், இரு கட்சிகளுக்கு இடையான உறவு ஸ்ட்ராங்கா தான் இருக்குங்குறத காட்டுது.

விமர்சனங்களுக்கு பதில் சொன்னாரா ஸ்டாலின் ?

இந்த சர்ச்சைகள் எல்லாம் ஒரு பக்கம் இருக்கும்போது, திமுக அதனுடைய கூட்டணி கட்சிகள் கிட்ட இருந்து விலகி இருக்குதா ? என்ற சந்தேகம் தொடர்ந்து எழுப்பப்பட்டு கொண்டு இருந்தது. இந்த நிலையில் தான் மலையாள மனோரமா சார்பில் இந்தியா 75  என்கின்ற நிகழ்ச்சியில் காணொளி மூலமாக கலந்து கொண்ட ஸ்டாலின்,  இதுக்கு பதில் சொல்ற விதமா ஒரு கருத்தை தெரிவிச்சாரு.

திமுக கூட்டணி இரு கட்சிகளுக்கு இடையான தேர்தல் கூட்டணி அல்ல. இது கொள்கை கூட்டணி. நாங்க கூட்டணியா இணக்கமாகத்தான் இருக்கோம் என  சொன்ன ஸ்டாலின்,  கூட்டணி கட்சிகள் அரசினுடைய தவறை சுட்டிக்காட்டும் போது அதை கூர்ந்து கவனித்து, தவறு இருந்தால் சரி செய்கிறோம் என்று சொல்லி இருக்கிறார். அது மட்டும் அல்லாம கூட்டணி கட்சித் தலைவர்களுடைய அறிக்கைகள்,  அவங்க கட்சி நாளிதழ்  அரசு மேல சொல்ற குறைகளையும் கவனிப்பதாக சொல்லியிருக்கிறார் ஸ்டாலின்.

கூட்டணி கட்சித் தலைவர்கள் திமுக கூட நல்ல உறவு தொடரதும், உடன் நிக்குறதும் தொடர்ந்தாலும் அடுத்த கட்ட தலைவர்கள், தொண்டர்கள் கிட்ட இந்த சலசலப்பு இருக்கத்தான் செய்யும். இதை தலைவர்கள் மறுத்தாலும், தேர்தல் களத்துல இந்த செயல்கள் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால்  அடுத்து வரக்கூடிய பெரிய தேர்தலுக்கு முன்னாடி இந்த பிரச்சனைகளை  தீர்க்க வேண்டிய கட்டாயம் திமுக கூட்டணிக்கு இருக்கு என சொல்கிறார்கள் அரசியல்் பார்வையாளர்கள்….

Categories

Tech |