Categories
தேசிய செய்திகள்

லடாக் எல்லையில் என்ன நடக்கிறது.. சரியான நேரத்தில் மத்திய அரசு தெரிவிக்கும்.. ராஜ்நாத்சிங்..!!

எல்லை பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள சீனா விருப்பம் தெரிவித்துள்ளது என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

எல்லையில் என்ன நடக்கிறது என்பது குறித்த விவரங்களை சரியான நேரத்தில் மத்திய அரசு தெரிவிக்கும் என அவர் தெரிவித்துள்ளார். தேசத்தின் பெருமையில் ஒருபோதும் சமரசம் செய்ய மாட்டோம் என்றும் இந்தியா பலவீனமான நாடு அல்ல என் கூறியுள்ளார். ஜம்மு ஜான் சம்வத் நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் காணொலி காட்சி மூலம் பேசினார். லடாக் மற்றும் சிக்கிமில், சீனாவை ஒட்டிய எல்லைப் பகுதிகளில் மேற்கொள்ளும் வழக்கமான ரோந்து பணிகளின் போது, சீன ராணுவத்தினர் இடையூறு ஏற்படுத்துவதாக, இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.

இதை மறுத்துள்ள சீனா, இந்திய ராணுவத்தினர் தான், எல்லை தாண்டி வருவதாக அபாண்டமாக கூறி வருகிறது.இதையடுத்து, இரு நாடுகளும் எல்லையோரம் ராணுவத்தை குவித்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இரு நாடுகளின் ராணுவ தலைமை தளபதிகளுடன் எல்லையில், சுஷுல் – மோல்டோ பகுதியில் பேச்சு வார்த்தை நடைபெற்றதை தொடர்ந்து, இருநாடுகளும் தங்களது படைகளை திரும்பப்பெற்றனர்.

இதையடுத்து எல்லைப் பிரச்னைக்கு பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்துள்ளன. இந்நிலையில் லடாக் பகுதியில் உள்ள நிலைமை குறித்து முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தலைமை தளபதி நரவானே, விமானப்படை தலைமைதளபதி பதுாரியா, கடற்படை தளபதி கரம்பீர் சிங் ஆகியோருடன் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |