கொரோனா பரவலினால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மக்கள் அனைவரும் வீட்டிற்குள் அடைபட்டனர். பள்ளி கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்ட நிலையில் மாணவர்கள் வீட்டிலேயே இருந்து பல புதிய விஷயங்களை கற்கத் தொடங்கினர். அதோடு ஊரடங்கில் இதுவரை தெரியாத பலவற்றை வீட்டில் இருந்தே தெரிந்து கொள்ளும் வாய்ப்பும் பலருக்கு கிடைத்துள்ளது.
இந்நிலையில் நலந்தாவே மற்றும் அகஸ்தியா அறக்கட்டளையின் மாணவர்கள் ஒன்றிணைந்து டிஜிட்டல் முறையில் எக்ஸிபிஷன் ஒன்றை நடத்துகின்றனர். இம்மாதம் 26ஆம் தேதி சனிக்கிழமை அன்று காலை 11 மணி முதல் 12.30 மணி வரை நடக்க இருக்கும் அந்த நிகழ்வில் பள்ளி மாணவர்கள் பங்கேற்று இல்லம் என்றால் என்ன என்ற தலைப்பில் கண்காட்சி போன்று தங்களது எண்ணத்தை வெளிப்படுத்த இருக்கின்றனர்.
இந்த நிகழ்வு கடந்த சில வாரங்களாகவே நடந்துவரும் நிலையில் இதில் பங்கேற்பவர்கள் வீடு என்ற சொல்லுக்கு அவர்கள் கூறும் அர்த்தத்தை புகைப்படங்களாக வெளிப்படுத்தி வருகின்றனர். வரும் 26-ஆம் தேதி நடைபெற இருக்கும் அந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக சென்னையை சேர்ந்த புகைப்படக் கலைஞர் குருநாதன் என்பவர் பங்கு பெறுகிறார். அவரும் தனது படைப்புகளை அந்த நிகழ்வில் பகிர்ந்து கொள்ள இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் லாக்டவுனில் மாணவர்களுக்கு கற்றலை ஏற்படுத்தும் விதமாக நலந்தாவே மற்றும் அகஸ்தியா அறக்கட்டளை மேற்கொள்ளும் இந்த முயற்சி புதுமையான பாராட்ட கூடிய விஷயமாக பார்க்கப்படுகிறது.
இத்தகவலை படிக்கும் மாணவர்களாகிய நீங்களும் வீடு என்றால் என்ன என்ற தலைப்பில் உங்களின் புதுமையான படைப்பை சமர்ப்பிக்கஆசைப்பட்டால் அல்லது மற்ற மாணவர்களின் கருத்தை தெரிந்து கொள்ள விரும்பினாலும் https://zoom.us/download விரும்பினால் கீழ்க்காணும் லிங்கை அழுத்தி ஜூம் செயலியை பதிவிறக்கம் செய்து https://bit.ly/3mv4TAJ மூலமாக பதிவு செய்து நிகழ்வில் பங்கேற்று பயன்பெறலாம். #TeenPhotoAcadamy, #EyespywithCPB