Categories
உலக செய்திகள்

“மர்ம கிணற்றில் என்ன இருக்கிறது!”.. ஆய்வில் தெரியவந்த ரகசியம்..!!

ஏமனில் இருக்கும் 367 அடி கொண்ட ஒரு கிணற்றில் முதல் தடவையாக ஆய்வாளர்கள் சோதனை நடத்தி, அதில் மர்மம் இல்லை என்று தெரியப்படுத்தியுள்ளனர்.

ஏமனில் இருக்கும் அல்மாரா பாலைவனத்திற்கு இடையில் சுமார் 367 அடி ஆழம் மற்றும் 30 மீட்டர் அகலம் உடைய பெரிதான கிணறு இருக்கிறது. அப்பகுதி மக்கள், இதனை “நரகக்கிணறு” என்று கூறி வந்தனர். அதாவது, அந்தக் கிணற்றிலிருந்து அதிக துர்நாற்றம் வீசியிருக்கிறது. எனவே, அதில் பூதம் உள்ளது என்றும் வதந்தி பரவியிருக்கிறது.

மேலும், சூரிய ஒளியும் அந்த கிணற்றில் சில அடிகளுக்கு தான் தெரிந்துள்ளது. எனவே  இருளாகவே அந்த கிணறு தெரிந்ததால் அதனுள் என்ன இருக்கும் என்ற மர்மம் நீடித்துள்ளது. இந்நிலையில், தற்போது நடத்தப்பட்ட ஆய்வில், உண்மை தெரியவந்திருக்கிறது.

10 ஆராய்ச்சியாளர்கள் சேர்ந்து முதல்தடவையாக, அந்த கிணற்றுக்குள் கயிற்றின் மூலம் இறங்கிவிட்டனர். அதன்பின்பு, அவர்கள் நடத்திய ஆராய்ச்சியில், அந்த கிணற்றுக்குள் ஏராளமான பறவைகளும், விலங்குகளும் இறந்து கிடந்தது தெரியவந்துள்ளது. அதிலிருந்து தான் துர்நாற்றம் வீசியுள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.
மேலும், அந்த கிணற்றினுள் அழகான நீர் வீழ்ச்சி இருப்பதாகவும் கூறினார்கள். அது மட்டுமல்லாமல், அதில் பூச்சிகளும், பாம்புகளும் அதிகம் கிடப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |