அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பை நேற்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியது. அதில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று அறிவித்த உயர்நீதிமன்றம், ஒருங்கிணைப்பாளர் – இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்றும் தெரிவித்தது. இதனால் ஓ. பன்னீர்செல்வம் தரப்பு மிகவும் மகிழ்ச்சி அடைந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமிக்கு இந்த தீர்ப்பு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் ஜெயலலிதா – எம்ஜிஆர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின்பு செய்தியாளர்கள் சந்தித்த ஓ.பன்னீர் செல்வத்திடம், பொதுக்குழு கூட்டத்தில் நீங்கள் மிகவும் அவமானப்படுத்தப்பட்டீர்கள். மீண்டும் அவரோடு சேர்ந்து பயணிப்பீர்களா என்று கேட்டபோது,
தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் மனப்பக்குவம் கொண்டவர்களாக இருக்க வேண்டும். அவமானங்களை யார் ஏற்படுத்தினாலும் ? அதை பொறுத்து, அரவணைத்து அனைவரையும் செல்ல வேண்டும். ஒருங்கிணைத்து செல்ல வேண்டும். விமர்சனங்களை தாங்கி கொள்ளக் கூடியவராக இருக்க வேண்டும் என்று அண்ணாவின் கூற்றையும் நினைவுபடுத்தி பதிலளித்தார்.